வரலாறு தெரியாத ராகுல்: பட்னவிஸ்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
Congress, Rahul, Fadnavis, RahulGandhi, Savarkar, Maharashtra, காங்கிரஸ், ராகுல், ராகுல்காந்தி, பட்னவிஸ், சாவர்க்கர், மஹாராஷ்டிரா

இந்த செய்தியை கேட்க

மும்பை: சவார்க்கர் குறித்து பேசிய ராகுல், சுதந்திர போராட்ட வரலாறு தெரியாமல் பேசுகிறார் என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.

டில்லியில் நேற்று (டிச.,14) காங்கிரஸ் சார்பில் நடந்த 'இந்தியாவை காப்போம்' பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், பார்லிமென்டில் உண்மையை பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை; ராகுல் காந்தி. உண்மை பேசியதற்காக நான் சாவேனே தவிர, மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த காங்கிரஸ் தொண்டனும் மன்னிப்பு கேட்க மாட்டான். மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறினார்.


latest tamil news



சாவர்கர் குறித்து ராகுல் பேசியதற்கு, பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிராவில் காங்., உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கும் சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத்தும் எதிர்ப்பு கருத்தை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: சாவர்க்கர் என்ற பெயரில், நாட்டிற்கும் சுய மரியாதைக்கும் ஒரு பெருமை இருக்கிறது. நேரு மற்றும் காந்தியைப் போலவே, சாவர்க்கரும் நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரை மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என பதிவிட்டிருந்தார்.


latest tamil news



இது குறித்து மஹா., மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர போராட்டம் குறித்த எந்த வரலாறும் தெரியாமல் ராகுல் பேசுகிறார். ராகுல் பேச்சுக்கு சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவிப்பது போல் பேசிவிட்டு, நேரு, மஹாத்மா காந்தி பற்றி பேசி காங்கிரசை சமாதானம் செய்தார். சாவர்க்கர் குறித்து பேசியதற்கு ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து மஹா., சட்டபேரவையில் குரல் எழுப்புவோம். இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
16-டிச-201910:12:28 IST Report Abuse
kowsik Rishi ஹலோ பட்னாவிஸ் அவர்களே ராகுல் காந்திக்கு வரலாறு நன்றாக தெரியும் ஆகவே தான் சாவர்க்கர் யார் என்று தெரிந்து தான் அவர் பெயரை சொன்னார். ஓகே . அதேசமயம் ராகுல் ரேப் யின் இந்தியா என்று சொன்னது தவறுதான் . இது ஏதோ உளறிவிட்டார் அவ்வளவு தான். அதை அவர் பார்த்துக்கொள்வார் நீங்கள் உங்களை ஆட்சியில் தொடராமல் செய்த காங்கரஸ் கட்சிக்கு வரலாறு நன்றாக தெரியும்
Rate this:
Cancel
வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்
16-டிச-201909:09:58 IST Report Abuse
வெண்பச்சை வேந்தன் வீர சாவர்க்கர் செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் போல செக்க்கிழுத்த வரலாறு யாரேனும் படித்ததுண்டா? அல்லது அந்தமான் சிறையாவது பார்த்ததுண்டா? வெள்ளக்கா ரணோரோடு சேர்ந்து உண்மை தியாகிகளை இருட்டடிப்புச் செய்த கும்பல் அல்லவா திரு ராகுல் பெரோஸ்கான் அவர்களின் குடும்பம்..இதெல்லாம் தெரியாத இன்றைய இளைய தலைமுறை தவறான வரலாறை படிக்கிறார்கள்..
Rate this:
Cancel
வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்
16-டிச-201908:02:04 IST Report Abuse
வெண்பச்சை வேந்தன் ராகுல் பெரோஸ்கான் ஏன் இப்படி வாயில் வந்ததை பேசுகிறார்? ஒரு தலைவருக்குண்டான நிதானம் ராகுல் பெராஸ்கான் தவறி விடுகிறார்.பிரியங்கா ராபர்ட் வாத்ரா அவர்கள் அறிவுரை வழங்கவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X