வரலாறு தெரியாத ராகுல்: பட்னவிஸ்| Dinamalar

வரலாறு தெரியாத ராகுல்: பட்னவிஸ்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (43)
Share
Congress, Rahul, Fadnavis, RahulGandhi, Savarkar, Maharashtra, காங்கிரஸ், ராகுல், ராகுல்காந்தி, பட்னவிஸ், சாவர்க்கர், மஹாராஷ்டிரா

இந்த செய்தியை கேட்க

மும்பை: சவார்க்கர் குறித்து பேசிய ராகுல், சுதந்திர போராட்ட வரலாறு தெரியாமல் பேசுகிறார் என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.

டில்லியில் நேற்று (டிச.,14) காங்கிரஸ் சார்பில் நடந்த 'இந்தியாவை காப்போம்' பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், பார்லிமென்டில் உண்மையை பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை; ராகுல் காந்தி. உண்மை பேசியதற்காக நான் சாவேனே தவிர, மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த காங்கிரஸ் தொண்டனும் மன்னிப்பு கேட்க மாட்டான். மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறினார்.


latest tamil news



சாவர்கர் குறித்து ராகுல் பேசியதற்கு, பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிராவில் காங்., உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கும் சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத்தும் எதிர்ப்பு கருத்தை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: சாவர்க்கர் என்ற பெயரில், நாட்டிற்கும் சுய மரியாதைக்கும் ஒரு பெருமை இருக்கிறது. நேரு மற்றும் காந்தியைப் போலவே, சாவர்க்கரும் நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரை மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என பதிவிட்டிருந்தார்.


latest tamil news



இது குறித்து மஹா., மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர போராட்டம் குறித்த எந்த வரலாறும் தெரியாமல் ராகுல் பேசுகிறார். ராகுல் பேச்சுக்கு சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவிப்பது போல் பேசிவிட்டு, நேரு, மஹாத்மா காந்தி பற்றி பேசி காங்கிரசை சமாதானம் செய்தார். சாவர்க்கர் குறித்து பேசியதற்கு ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து மஹா., சட்டபேரவையில் குரல் எழுப்புவோம். இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X