ஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்; இந்திய அணி ரன் குவிப்பு

Added : டிச 15, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியா, அணி, ரன், குவிப்பு

இந்த செய்தியை கேட்க

சென்னை: விண்டீஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் அரை சதம் கடந்தனர்.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபே அறிமுக வாய்ப்பு பெற்றார்.


latest tamil news



திணறல் துவக்கம்



இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. காட்ரெல் 'வேகத்தில்' ராகுல் (6) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி 4 ரன்களில் போல்டானார். ஜோசப் பந்தில் ரோகித் (36) ஆட்டமிழந்தார். பின், இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தபோது, ஸ்ரேயாஸ் (70) ஆட்டமிழந்தார். போலார்டு பந்தில் ரிஷாப் (71) அவுட்டானார். ஜாதவ் (40) அணிக்கு கைகொடுத்தார். ஜடேஜா (21), ஷிவம் துபே (9) விரைவில் திரும்பினர்.
இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. ஷமி (0), தீபக் சகார் (7) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் காட்ரெல், கீமோ பால், ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-டிச-201918:09:51 IST Report Abuse
ARUN.POINT.BLANK in 20 20 mode also windies played well ... in 50 overs if they stick to the wicket they will make it... 288 is not பெரிய ஸ்கோர் 🤔
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X