பாக்., வீரர் அபித் அலி சாதனை

Added : டிச 15, 2019
Advertisement
Abid_Ali,1st_man,Pakistan,பாகிஸ்தான்,record

ராவல்பிண்டி: கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட், ஒருநாள் அறிமுக போட்டியில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையை பாக்., அணியின் அபித் அலி படைத்தார்.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் போட்டியில், மழை விளையாடியது. முதல் இன்னிங்சில் இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின் முதல் இன்னிங்சை விளையாடிய பாக்., 2 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தொடக்க வீரர் அபித் அலி (109) மற்றும் பாபர் ஆஸம்(102) சதம் விளாசினர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் துபாயில் ஆஸி., உடன் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய அபித் அலி, சதமடித்தார். தற்போது டெஸ்ட் போட்டியின் அறிமுக போட்டியிலும் சதம் அடித்ததன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில், ஒருநாள், டெஸ்ட் அறிமுக போட்டியில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X