டில்லி பல்கலை.,யில் மாணவர்கள் - போலீசார் மோதல்; பதட்டம்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (32)
Advertisement

புதுடில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை., மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது.






டில்லியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (15ம் தேதி ) இரவில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதினர். இதில் போலீசார் மீது கல்வீசப்பட்டது. பல்கலை., அருகே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பல்வேறு அரசு வாகனங்கள் தீக்கிரயாக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை , லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் பலர் காயமுற்றதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன.


ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை., க்குள் போலீசார் நுழைந்ததாக பல்கலை., நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில் இந்த போராட்டத்தை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானுல்லா தூண்டி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் மறுத்துள்ளார்.

பல்கலை., ஒட்டிய பல்வேறு சாலைகளை போராட்டக்காரர்கள் மறித்து பாதிப்பை ஏற்படுத்தியதால் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
16-டிச-201910:19:00 IST Report Abuse
 Sri,India இந்த சட்டத்தை எதிர்ப்பவர்ப்பிகள் யாராக இருந்தாலும் பாகிஸ்தான் ,ஆபிகானிஸ்தான் ,ஈராக் ,ஈரான் , சோமாலியா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு வாழ மத்திய அரசு பாஸ்போர்ட் ,விசா வழங்க நடவபடிக்கை எடுக்க வேண்டும் . , அந்த நாட்டிலாவது இவர்கள் நிம்மதியாக வாழ குடியுரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
16-டிச-201907:49:47 IST Report Abuse
மணி இவனுங்க எதுக்கு போராட்டம் பண்ணுறானுங்க? மதரீதியில் துன்புறுத்தப்பட்டால், பிரச்சினையை மதரீதியில்தான் பார்க்கமுடியுமேதவிர பொதுவாக பார்க்கமுடியாது. மதரீதியாக பாதிக்கப்பட்ட இந்திய பூர்வகுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது குற்றமா? இதேபோல இலங்கையில் பவுத்தர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் இந்துக்களுக்கும் இங்கு அடைக்கலம் பெரும் வாய்ப்பு கொடுத்திருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
16-டிச-201906:36:50 IST Report Abuse
spr வன்முறையில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர், சமுதாய அமைதி குலைவுக்குக் காரணமானவர்கள் எவரையும் மாணவர், இளம் வயதுடையவர்கள், சிறுபான்மையினர் என்றெல்லாம் சொல்லி அவர்கள் செய்யும் குற்றத்தை ஆதரிக்காதீர்கள் அவர்கள் எவரேனும் அரசின் நடைமுறையினை ஆதரிக்கவில்லை என்றால், அமைதியாக காந்தீய வழியில் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கலாம் இல்லையேல், அவர்கள் எல்லோருமே குற்றவாளிகள் என்ற அடிப்படையிலேயே தண்டனை தரப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X