பொது செய்தி

இந்தியா

ஹெட்மயர், ஹோப் அதிரடி சதம்: விண்டீஸ் வெற்றி

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை: விண்டீஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஹெட்மயர் சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபே அறிமுக வாய்ப்பு பெற்றார்.







திணறல் துவக்கம்


இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. காட்ரெல் 'வேகத்தில்' ராகுல் (6) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி 4 ரன்களில் போல்டானார். ஜோசப் பந்தில் ரோகித் (36) ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தபோது, ஸ்ரேயாஸ் (70) ஆட்டமிழந்தார். போலார்டு பந்தில் ரிஷாப் (71) அவுட்டானார். ஜாதவ் (40) அணிக்கு கைகொடுத்தார். ஜடேஜா (21), ஷிவம் துபே (9) விரைவில் திரும்பினர்.

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்தது. ஷமி (0), தீபக் சகார் (7) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் காட்ரெல், கீமோ பால், ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.






ஹெட்மயர் சதம்


விண்டீஸ் அணிக்கு சுனில் அம்ப்ரிஸ் (9) ஏமாற்றினார். ஷாய் ஹோப், ஹெட்மயர் ஜோடி மிரட்டியது. இந்திய பந்துவீச்சை சிதறடித்த ஹெட்மயர் ஒரு நாள் அரங்கில் ஐந்தாவது சதம் விளாசினார். இவர் 139 ரன்களில் அவுட்டானார். தன் பங்கிற்கு ஹோப் சதம் அடித்தார். ஷிவம் துபே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பூரன் வெற்றியை உறுதி செய்தார். விண்டீஸ் அணி 47.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப் (102), பூரன் (29) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாவது போட்டி வரும் 18ல் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-டிச-201914:21:38 IST Report Abuse
Malick Raja + எப்போதும் விண்டீசை நமது அணி விட்டு வைத்ததே இல்லை .. ஒருமுறை ஆறுதல் வெற்றி பெற்றிருக்கலாமா ? என்பது அடுத்த இரண்டு ஆட்டங்களில் பார்ப்போமே . இந்திய அணிக்கு தொடரின் வெற்றி நிச்சயம் ..
Rate this:
Share this comment
Cancel
mupaco - Madurai,இந்தியா
16-டிச-201912:55:50 IST Report Abuse
mupaco இருபது ஓவர் விளையாட்டில் மும்பையில் 240 அடிக்கப்பட்டது நினைவிருக்கும். இப்ப சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
15-டிச-201923:03:53 IST Report Abuse
ARUN.POINT.BLANK 288 is not ரன் குவிப்பு... they achieved easily
Rate this:
Share this comment
ManiS - ,
16-டிச-201905:24:30 IST Report Abuse
ManiSKabadi Jalikattu anneee solitaaruppaa.... Mudinchu.......
Rate this:
Share this comment
ManiS - ,
16-டிச-201905:24:08 IST Report Abuse
ManiSKabadi Jalikattu anneee solitaaruppaa.... Mudinchu.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X