டில்லியில் பதட்டம்: போலீஸ் தலைமையகம் முன்பு குவிந்த மாணவர்கள்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (16)
Advertisement
JNU,Delhi,டில்லி,Protesters,JawaharlalNehruUniversity,students, DelhiPolice,Headquarters

புதுடில்லி: டில்லி போலீஸ் தலைமையகம் முன் ஜே.என்.யூ., பல்கலை மாணவர்கள் மற்றும் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்களும் குவிந்து வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.





குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் வன்முறை வெடித்தையடுத்து 3 பஸ்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனையடுத்து இஸ்லாமியா பல்கலை முன்பு போலீசார் குவிந்தனர். போலீசார் மீது கல்வீசி தாக்கப்பட்டது.





பல்கலை., அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அரசு வாகனங்கள் தீக்கிரையாகின. போலீசார் கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதில் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் காயமடைந்தனர். அமைதி காக்கும்படி டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்நிலையில், இஸ்லாமியா பல்கலை மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து, ஜவஹர்லால் நேரு பல்கலை., (ஜே.என்.யூ) மாணவர்கள் டில்லி, போலீஸ் தலைமையகம் முன் மாணவர்களுக்கு ஆதரவாக குவிந்தனர். குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்களும் குவிந்து வருவதால், டில்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரி தலைவர்களான டி.ராஜா மற்றும் பிருந்தா காரத் மற்றும் பலர் டில்லி போலீஸ் ஸ்டேஷன் முன்பு வந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
16-டிச-201910:53:58 IST Report Abuse
venkatesaperumal மாணவர்கள் என்ற பெயரில் வெடிகுண்டு எறிந்து பொது சொத்துக்களை , மக்களின் அன்றாட வாழ்வை நாசம் செய்யும் கயவர்களை கைதுசெய்து அபராதமும் , கடும் தண்டனையும் விதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-டிச-201910:23:08 IST Report Abuse
RajanRajan இதை எல்லாம் வச்சு பார்க்கையில் இத்தனை காலம் ஆண்ட காங்கிரஸ் டில்லியில் பல்கலைக்கழகத்தையே தீவிரவாத மார்க்கத்தை வளர்க்கும் கூடமாக உருவாக்கி இருப்பது வெட்ட வெளிச்சம். இன்னும் இவனுங்க ஆட்சிக்கு வைத்திருந்தால் இந்தியாவின் இறையாண்மையை மொத்தமா பணயம் வச்சு துட்டு பார்த்திருப்பானுங்க. நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த மார்க்க வாதிகளை கடுமையான சட்டத்தால் நாடு கடத்தி இந்தியாவை தூய்மை படுத்துங்கள். இந்தியா காங்கிரசின் கையிலே இருந்து தப்பியது தெய்வாதீனம் தான். எனவே மக்கள் ஓன்று சேர்ந்து நாட்டை சூறையாடும் இந்த தாலிபான் கூட்டத்தை இந்தியாவில் இருந்து ஒழித்து கட்டவேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் மோடி சர்க்கார் ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-டிச-201909:46:25 IST Report Abuse
சீனி இப்படி பஸ்கள் எரியவில்லையெனில், அரசியல்வாதிகள் வீட்டில் அடுப்பு எரியாது. மெரினா போராட்டமும் இப்படித்தான் வன்முறையில் முடிந்தது. அது தான் உண்மை. மாணவர்கள் எதிர்காலம் கருதி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும், இல்லையெனில் பல்,முட்டியை உடைத்துக்கொண்டு, கோர்ட் படியேறிக்கொண்டு வெட்டி வாழ்க்கை வாழவேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X