சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்லாத நோட்டுகள் வைத்திருந்த பாட்டி மரணம் 

Added : டிச 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 செல்லாத நோட்டுகள் வைத்திருந்த பாட்டி மரணம் 

பல்லடம்: செல்லாத நோட்டு வைத்திருந்த மூதாட்டிகளில், ஒருவர் உயிரிழந்தது, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பூமலுார் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள், 75; தங்கம்மாள், 70. தனியாக வசித்து வரும் இருவரும், மதிப்பிழந்த பழைய, 500 - 1,000 நோட்டுகள், 46 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தனர். மருத்துவ செலவுக்காக வைத்திருந்தது செல்லாது என்பதை அறிந்து, சோகமடைந்தனர்.

இதையறிந்த, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், இருவருக்கும், மருத்துவ உதவி மற்றும் முதியோர் பென்ஷன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் புருஷோத்தமன் என்பவர், அவர்கள் வைத்திருந்த பணத்துக்கு பதில், 46 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, உதவினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், மூதாட்டிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், மூச்சு திணறலில் அவதிப்பட்டு வந்த தங்கம்மாள், சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை உயிரிழந்தார். பலரது உதவியால், சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில், மூதாட்டிகளில் ஒருவர் உயிரிழந்தது, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-டிச-201900:27:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சகோதரிகள் ரங்கம்மாள், 75 தங்கம்மாள், 70. .. ரஜினிகாந்த வயசு தான் ஆகுது, பாட்டின்னு சொல்றீங்க.. ரஜினியை தாத்தான்னு சொல்ல மாட்டேங்குறீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X