பொது செய்தி

தமிழ்நாடு

ஆகட்டும்டா தம்பி ராஜா... நட ராஜா...!: மேட்டுப்பாளையத்தில் துவங்கியது யானைகள் முகாம்

Added : டிச 15, 2019
Advertisement
 ஆகட்டும்டா தம்பி ராஜா... நட ராஜா...!:  மேட்டுப்பாளையத்தில் துவங்கியது யானைகள் முகாம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், கோவில் யானைகள் பங்கேற்ற சிறப்பு நலவாழ்வு முகாம், நேற்று கோலாகலமாக துவங்கியது.

இதில், 26 யானைகள் பங்கேற்றுள்ளன.தமிழக அரசின் அறநிலையத் துறை, ஒவ்வொரு ஆண்டும், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, பத்ரகாளியம்மன் கோவில் அருகே, யானைகள் புத்துணர்வு முகாமை நடத்தி வருகிறது. நடப்பாண்டு முகாம், நேற்று, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி துவக்கி வைத்து பேசுகையில், ''யானைகள் முகாம், 48 நாட்கள் நடக்க உள்ளது. இதற்காக, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.ஸ்ரீரங்கம் கோவில், ஆண்டாள், 41; மதுரை மீனாட்சி கோவில், பார்வதி, 23; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், தெய்வானை, 22; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில், ஜெயமால்யதா, 17; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், காந்திமதி, 47, உட்பட, 26 யானைகள் முகாமில் பங்கேற்றுள்ளன.மேலும் இரு யானைகள் வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில், யானைகளுக்கு, 20 வகையான தீவனங்களும், ஏழு வகையான மருந்துகளும் வழங்கப்பட உள்ளன. இதன்படி, கூந்தல் பனை, தென்னை மட்டை, தீவனப்புல், கரும்பு, சோளத்தட்டு, கீரை வகைகள், பலா இலைகள், ரீட்ஸ், ஆல், அத்தி, அரசு, மூங்கில் ஆகிய பசுந்தீவனங்கள் வழங்கப்பட உள்ளன. இது அல்லாமல், அரிசி சாதம், பச்சைப்பயிறு, கொள்ளு, உப்பு, மஞ்சள் ஆகிய தானிய வகைகளும் வழங்கப்பட உள்ளன.அஷ்டசூரணம், பயோ பூஸ்ட் மாத்திரை, லிவ் - -52 மாத்திரை, மல்டி வைட்டமின் மாத்திரைகள் போன்ற ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்பட உள்ளன. எடை குறைவாகவும், சோர்வாகவும் இருக்கும் யானைகளுக்கு, கால்நடை டாக்டர்கள் பரிந்துரைப்படி, வழக்கமான தீவனங்களுடன், பேரீச்சை, அவல், கேரட், பீட்ரூட் ஆகிய சிறப்பு உணவு வகைகளும் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X