சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் மோதிய அரசு பஸ் வியாபாரி பலி; 17 பேர் காயம்

Added : டிச 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மரத்தில் மோதிய அரசு பஸ் வியாபாரி பலி; 17 பேர் காயம்

கடலுார்: சிறுபாக்கம் அருகே, நள்ளிரவில், சாலையோர புளிய மரத்தில் அரசு பஸ் மோதி, வெள்ளி வியாபாரி இறந்தார்; 17 பயணியர் காயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30 பயணியருடன், தமிழக அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு சேலம் புறப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த டிரைவர் கரிகாலன், 43, ஓட்டினார். நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, சிறுபாக்கம் அடுத்த அடரி அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில், பஸ்சின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்தது.விபத்தில் படுகாயமடைந்த, சேலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த, வெள்ளி வியாபாரி கோவிந்தராஜ், 53, அதே இடத்தில் இறந்தார்.டிரைவர் கரிகாலன், 43; கண்டக்டர் இளையராஜா, 40, மற்றும் பயணியர் என, 17 பேர் காயமடைந்தனர். அனைவரும், விருத்தாசலம் மற்றும் பெரம்பலுார் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-டிச-201914:39:49 IST Report Abuse
தமிழ்வேல் வேகம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X