பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்டம்: பாக்., இந்துக்கள் வரவேற்பு

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: குடியுரிமை சட்டத்திற்கு பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.குடியுரிமை சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு கட்சிகளும் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து

புதுடில்லி: குடியுரிமை சட்டத்திற்கு பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு கட்சிகளும் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன.latest tamil newsஇந்நிலையில் பாக். இந்துக்கள் குடியுரிமை சட்டத்தை உள்ளப்பூர்வமாக வரவேற்றுள்ளனர். அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் குடியுரிமை சட்டம் குறித்து கேட்டபோது, பெரும்பாலானோர் குடியுரிமை சட்டம் தங்களுக்கு பாதுகாப்பானது என்று தெரிவித்தனர். பாக்.,கில் தங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவம் குறித்தும் பேசினர்.


latest tamil newsஇது குறித்து பெண் ஒருவர் கூறியதாவது, ' குடியுரிமை சட்டத்தினால் என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என் பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு குடியுரிமை சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது. நல்ல எதிர்காலம் தேடி இந்தியா வந்துள்ளோம். எனவே எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.


latest tamil newsமுதியவர் ஒருவர், 'நான் சொத்துக்கள் அனைத்தையும் பாக்.,கில் இழந்து விட்டு வந்துள்ளேன். இந்தியாவில் எனக்கு, 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்வதற்கு உரிமை வேண்டும்' என்று தெரிவித்தார்

இளைஞர் ஒருவர், ' நான் 13 வயதில் பாக்கிலிருந்து இந்தியா வந்தேன், இந்தியாவில் நாங்கள் சுதந்திரமாக வாழ முடிகிறது. பாக்.,கில் இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லை. இந்து மதத்தை கடைப்பிடித்த காரணத்தால் நாங்கள் தாக்கப்பட்டு வந்தோம். பாக்., கில் இந்துக்களுக்கு மரியாதை இல்லை. இந்தியாவை எங்கள் நாடாக உணர்கிறோம்' என்று கூறினார்.


latest tamil newsபாக்., கில் கவுன்சிலர் பதவியில் இருந்தவர், ' பாக்கில் நான் கவுன்சிலராக இருந்தேன். இருந்தாலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். இந்து என்ற காரணத்திற்காக என் குடும்பத்தினருக்கு குடிநீர் கூட வழங்கப்படுவது இல்லை. இந்துக்களை பாக்கிஸ்தானியர்கள் மதிப்பதில்லை.' என்றார்

மேலும் பலர், ' என் மகள்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இந்துக்கள் இரண்டாம் தர மக்களாக பாவிக்கப்பட்டனர். உறவினர்கள் இஸ்லாமுக்கு மாற வற்புறுத்தப்பட்டனர். ஹோலி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளை பாக்.,கில் கொண்டாட அனுமதிக்கவில்லை. கோவில் கட்டுவதற்கும் அனுமதி இல்லை. பொருளாதார காரணத்தினாலே நாங்கள இந்தியாவிற்கு முன்னதாகவே வர முடியவில்லை. சந்தையில் காய்கறிகளை கூட தொட்டு பார்க்க எங்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை' இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-டிச-201915:39:06 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) மத வெறியர்கள் பாரத் மாதாவுக்கு ஜெ என்று சொன்ன வயதான பெரியவரை அடித்து துன்புறுத்தியது மனதை வெகுவாக பாதிக்கிறது.
Rate this:
Cancel
21-டிச-201915:36:50 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) நேரு செய்த தவறு இஸ்லாமியர்களுக்கு தனி நாடு கொடுத்து இங்கேயும் இருக்க அனுமதித்தது.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
16-டிச-201913:04:50 IST Report Abuse
TamilArasan பாகிஸ்தானில் பள்ளி செல்லும் இந்து பெண் குழந்தைகளை கூட தூக்கி சென்று கட்டாய திருமணம் செய்த்து கொள்வார்கள் அரக்கர்கள் - யூடியூபில் தேடிப்பாருங்கள் பாகிஸ்தான் இந்து பெற்றோர்கள் கண்ணீர் வடிப்பதை...
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-டிச-201913:16:25 IST Report Abuse
Milirvanமேற்கு கிழக்கு பக்கி தேசத்தில் ஹிந்து பெருமக்களுக்கு இழைக்கப்பட்ட/படும் கொடூரங்கள் சிறிது நினைவு வந்தாலும் மனம் பதைக்கும்.. இங்குள்ள சில கொடூரர்கள் நமுட்டு சிரிப்புடன் இதனை ரசிப்பதையும் அறிவேன்.. நிற்க.. நாம் வலுவானவர்களாக தீரமுள்ளவர்களாக ஆவதே இதற்கு தீர்வு.. யூதர்கள் நல்ல உதாரணம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X