பொது செய்தி

இந்தியா

1000 சதவீதம்! குடியுரிமை மசோதா சரி என மோடி திட்டவட்டம்

Updated : டிச 17, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement
குடியுரிமை மசோதா,வழக்கு, சரி, மோடி ,காங்.,  கண்டனம்

தும்கா: ''குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது, 1000 சதவீதம் சரியானது என்பது காங்.,கின் செயல்பாடுகளால் உறுதியாகி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையைத் துாண்டிவிட்டு, காங்., குளிர்காய்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், சட்டத் திருத்தம் சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை மீறி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, சமீபத்தில் பார்லி.,யில் நிறைவேறியது.


போராட்டங்கள்:


அதைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன; சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு நடக்கும் தேர்தலையொட்டி, தும்காவில், நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை.


கடும் எதிர்ப்பு:

இந்த நிலையில் அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வந்தோம். அதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தங்களுக்கு பங்களாக்கள் கட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில மக்களின் நலன் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை. அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இங்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு வாழ்வுரிமை அளிக்கும் வகையில், இந்த மசோதாவை, பா.ஜ., கொண்டு வந்தது. அது பொறுக்காமல், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்க்கட்சிகள், பல மாநிலங்களில் வன்முறையை துாண்டி விட்டு உள்ளன. ஆனால், அதை மக்கள் நிராகரித்து விட்டனர். வன்முறையைத் துாண்டிவிட்டு, அதில் குளிர்காய்வதற்கு, இவர்கள் திட்டமிட்டிருந்தனர். எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் மூலம், பார்லி., எடுத்த முடிவு, 1000 சதவீதம் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.காங்கிரஸ் கண்டனம்:


லோக்சபா காங்கிரஸ் தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது: நாட்டின் பாதுகாப்பில், காஷ்மீரைப் போல, அசாம் ஒரு முக்கிய பகுதி. தற்போது இந்த இரண்டு பகுதிகளிலும் பாதுகாப்பு பிரச்னை கவலைக்கிடமாக உள்ளது. அசாம், இரண்டாவது காஷ்மீராக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ.,வினர் சந்திப்பு:


ஜார்க்கண்ட் மாநில பிரசாரத்துக்கு செல்லும் வழியில், மேற்கு வங்க மாநிலத்தின் அன்டால் விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் நிறுத்தப்பட்டது. அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பொதுச் செயலர் பிஸ்வபிரியா ராய் சவுத்ரி தலைமையிலான, பா.ஜ.,வினர், அவரை சந்தித்தனர். அப்போது மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து, அவர்கள் விவரித்தனர்.வழக்கு தொடர முடிவு:


அசாமில் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ஏ.ஜி.பி., எனப்படும் அசோம் கன பரிஷத் கட்சி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. ''இந்த சட்டத்தால் தங்களுடைய அடையாளத்தை இழக்க நேரிடும் என, அசாம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ''அதனால், இந்த மசோதாவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்,'' என, கட்சியின் மூத்த தலைவர், குமார் தீபக் தாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201920:54:00 IST Report Abuse
Murugesan ,நாட்டையே சீரழிக்க முடிவு செய்து விட்டார்கள்
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
16-டிச-201916:13:38 IST Report Abuse
ராம.ராசு 100 சதவிகிதம் என்பது மிகச் சரியானது. ஆனால் நமது பிரதமர் சொல்வது 1000 சதவிகிதம். அது சாத்தியமில்லை. அப்படி சரியானதாக இருக்குமென்றால் எதிர்கட்சினரும் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இப்படிச் சொல்வது என்பது... "தான் பிடித்த முயலுக்கு....." கதைதான்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-டிச-201906:30:53 IST Report Abuse
Darmavanஅபத்தமான கருத்து...
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
16-டிச-201915:58:41 IST Report Abuse
Suri 1000 % மக்களின் கவனத்தை திசை தீர்ப்புவதில் வல்லவர்......நாடே பொருளாதாரத்தில் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறது. அதை பற்றி பேசினால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும் என்று மக்களின் நலனுக்கு சற்றும் சமபந்தம் இல்லாத இந்த மசோதாவை நிறைவேற்றி மக்களின் கவனத்தை திசை திருப்பியதில் மாபெரும் வெற்றி.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-டிச-201906:32:20 IST Report Abuse
Darmavanநாட்டின் பொருளாதாரம் பாதிப்பே இவர்களால்தான் சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்கள்தாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X