பொது செய்தி

இந்தியா

ராகுல் மீது மானநஷ்ட வழக்கு; சாவர்க்கர் பேரன் ரஞ்சித் முடிவு

Updated : டிச 17, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
மும்பை: 'மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் இல்லை' என கூறிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக, வீர சாவர்க்கரின் பேரன், ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்டில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், 'பிரதமர் மோடி, எப்போது பார்த்தாலும், 'மேக் இன் இந்தியா' என்கிறார். ஆனால், எங்கு பார்த்தாலும், 'ரேப் இன்
Congress,Rahul,RahulGandhi,Veer_Savarkar,Savarkar,grandson,Ranjeet_Savarkar,Ranjeet,காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி,சாவர்க்கர்,பேரன்,ரஞ்சித்

மும்பை: 'மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் இல்லை' என கூறிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக, வீர சாவர்க்கரின் பேரன், ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், 'பிரதமர் மோடி, எப்போது பார்த்தாலும், 'மேக் இன் இந்தியா' என்கிறார். ஆனால், எங்கு பார்த்தாலும், 'ரேப் இன் இந்தியா'வாகத் தான் தெரிகிறது' என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., 'ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டது.

இந்நிலையில், டில்லியில் காங்கிரஸ் சார்பில், நேற்று முன்தினம் நடந்த 'இந்தியாவை காப்போம்' பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசும் போது, 'பார்லிமென்டில் உண்மையை பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சாவர்க்கர் இல்லை. 'உண்மையை பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் சாவேனே தவிர, மன்னிப்பு கேட்க மாட்டேன். மோடி தான், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என கூறினார்.


மோசமான கருத்து:

ராகுலின் இந்தப் பேச்சு குறித்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறியதாவது: ராகுல் பேசியிருப்பது நல்லதல்ல. அவர், சாவர்க்கர் இல்லை என்பது நல்ல விஷயம். அவரது பாட்டி, இந்திரா, தன் பெயரில் இருந்து, 'நேரு' என்பதை அகற்றி விட்டு, 'காந்தி' என்பதை சேர்த்ததற்காக, அவருக்கு ராகுல் நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஆங்கிலேயர்களுக்கு நன்றியுடன் இருந்தவர் நேரு. அவர்களது அரசில் அமைச்சராக பணியாற்ற, நேரு விரும்பினார் என்பது வரலாறு. ராகுல், சுதந்திர போராட்ட வீரரை அவமானப்படுத்தியுள்ளார். இது போன்ற மோசமான கருத்து களை சொல்வது, ராகுலுக்கு வாடிக்கையாகிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல் மீது அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன். சாவர்க்கரை அவமதிக்கும் விதமாக யாரும் பேசக்கூடாத; ராகுல் மீது, அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாவர்க்கரை இழிவுப்படுத்திய ராகுலை, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலை வருமான உத்தவ் தாக்கரே, வன்மையாக கண்டிக்க வேண்டும். இது தொடர்பாக, உத்தவ் தாக்கரேவை சந்திக்க உள்ளேன். ஹிந்துத்வா தான், சிவசேனாவின் முக்கிய கொள்கை. கொள்கையா, பதவியா என்பதை முடிவு செய்யுமாறு, உத்தவிடம் கேட்டுக் கொள்வேன். இவ்வாறு ரஞ்சித் கூறினார்.


கண்டன தீர்மானம்:

மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், பா.ஜ.,வை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: சாவர்க்கர் குறித்து தெரிவித்த கருத்துக்கு, ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். சுதந்திரப் போராட்டம் குறித்து, ராகுலுக்கு எதுவும் தெரியாது என்பது உண்மையாகிவிட்டது. சாவர்க்கரை அவமரியாதையாக பேசிய கட்சியினருடன் அமர்ந்து தேநீர் குடிக்க விரும்பாததால் தான், முதல்வர் உத்தவ் தாக்கரே, எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கிய தேநீர் விருந்தை, பா.ஜ., புறக்கணித்தது. சாவர்க்கரை அவதூறாகப் பேசிய ராகுல் மீது, சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வருவோம். இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
18-டிச-201917:46:39 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் சாவர்க்கர் மடிப்பிச்சை கேட்டது உண்மை தானே
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
16-டிச-201920:02:13 IST Report Abuse
a natanasabapathy Saamaaniyayavarkalai thandikka mattume neethi manrankal kodeeswararkalaiyum arasiyal vaathikalaiyum thandikka alla
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-டிச-201916:32:17 IST Report Abuse
Vijay D Ratnam கோர்ட் எத்தனை தடவை தான் குட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X