அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (78)
Share
Advertisement
குடியுரிமை, சட்டத்தை,பரூக் அப்துல்லா, எதிர்ப்பது, விடுதலை, ஸ்டாலின்,

சென்னை: 'குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அகதிகளாக வரும் எல்லாருக்குமே குடியுரிமை வழங்கப்படும் என சொல்லி இருந்தால் எதிர்க்கப் போவதில்லை' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற புதியச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான மக்கள் விரோத பிற்போக்கான சட்டம். இந்த சட்டத்திற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடந்து வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க.வும் போராட்டங்களை நடத்தி வருகிறது. அகதிகளாக வரும் எல்லாருக்குமே குடியுரிமை வழங்கப்படும் என சொல்லி இருந்தால் நாம் எதிர்க்கப் போவதில்லை.

இஸ்லாமிய மக்களை மட்டும் புறக்கணிக்கும் வகையில் மக்களைப் பிளவுப்படுத்தும் சட்டமாக அதை பா.ஜ. மாற்றி உள்ளது. அதற்கு அ.தி.மு.க. பக்கபலமாக இருக்கிறது; அதனால் தான் எதிர்க்கிறோம். மற்ற நாட்டைச் சேர்ந்த ஹிந்துக்கள் வரலாம்; இலங்கை தமிழர்கள் மட்டும் வரக்கூடாது என்றால் அவர்களை மத்திய அரசும் அ.தி.மு.க. அரசும் ஹிந்துக்களாக பார்க்கவில்லை.

பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசம் ஆகிய நாடுகளை மட்டும் குறிவைத்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன் நோக்கம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தானோ. சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு இந்தச் சட்டம் உட்பட்டதா என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையமே வலியுறுத்தி இருக்கிறது. தமிழினத்தின் உரிமையைக் காக்க போராட்டக் களம் காண தி.மு.க. தயாராகி விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பரூக் விடுதலைக்கு வலியுறுத்தல்:

'காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனே விடுதலை செய்ய வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

'டுவிட்டரில்' ஸ்டாலின் கூறியிருப்பதாவது: முன்னாள் காஷ்மீர் முதல்வரும் 82 வயது நிரம்பிய லோக்சபா எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவை எவ்விதக் காரணமும் இன்றி பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைத்திருப்பது நம் ஜனநாயக மரபுகளையும் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளையும் அவமதிக்கும் செயல். உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
22-டிச-201914:39:36 IST Report Abuse
sankar இதுல என்ன பெரிய காமெடி என்றால் - "அதிமுகவும் பாமகவும் இந்த சட்டத்தை ஆதரித்தால் இந்தியா பற்றிக்கொண்டு எரிகிறது" - இது இவரது சமீபத்திய வசனம் - என்ன புரிகிறது - மோடியை நேரடியா எதிர்க்கும் துணிவு இல்லை - அது மட்டுமே உண்மை
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
22-டிச-201914:36:56 IST Report Abuse
sankar அந்த சட்டம் என்னவென்று புரிவது ஒருபுறம் இருக்கட்டும் - அது என்னவென்று படிக்கவாவது இவருக்கு தெரியுமா
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
22-டிச-201916:47:59 IST Report Abuse
s.rajagopalanஇப்படியெல்லாம் கேட்கக்கூடாது ....எல்லோரும் எதோ சொல்கிறார்கள் நாமும் ஏதாவது சொல்லி தொலைக்க வேண்டுமே என்று எழுதி கொடுத்ததை படிக்கிறார்.. விட்டால் என்னுடன் விவாதிக்க தயாரா எண்டு கேட்ப்பீர்கள் போலிருக்கிறதே ? தப்பு .மூல பத்ரம் கொடுத்தாச்சே ..... . இனியூமா ?...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-டிச-201911:53:07 IST Report Abuse
Rasheel இலங்கை தமிழர்களை கொன்றவர்கள் அவர்களுக்கு குடியுரிமை பற்றி பேசுவது மிக பெரிய காமெடி இலங்கை தமிழருக்கு குடியுரிமை கொடுப்பது அவர்கள் நாட்டில் அவர்கள் ஒட்டு உரிமையை பறிப்பது. அவர்கள் உரிமையை பறித்தல். அவர்களது வடக்கு மற்றும் கிழக்கில் மைனாரிட்டி ஆக மாற்ற செய்யும் சதி செயல் ஒரு முஸ்லீம் நாட்டில் (பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானில்) ஒரு முஸ்லிமீக்கு என்ன ஆபத்து? பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானில் ஒவ்வரு தாழ்த்தப்பட்ட ஹிந்து கிறிஸ்டின் புத்த மதத்தவன் தன் மானத்தை, நில புலனை, பரம்பரையாக வாழ்ந்த வீட்டை, தான் ஆயுள் முழுதும் காப்பாறுவேன் என்று உறுதி கூறிய மனைவியை இழந்து விட்டு இங்கு அடைக்கலம் தேடுகிறான். இதை எதிர்க்க ஒரு சுய நல கூட்டம். பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானில் வாழும் மிகவும் பிற்பட்ட மக்கள் மற்றும் தலித்துகள் இந்த சட்டத்தால் தன் மானத்தோடு இந்தியாவில் வாழ முடியும். இதை சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. எந்த ஒரு முற்பட்ட சாதியினரும் இப்போது அந்த நாடுகளில் இல்லை. இந்த நாடு 70 ஆண்டுகளாக குடும்ப அரசியல் திருடர்களால், நாட்டு பற்று இல்லாத தேச துரோக மக்களால் திசை திருப்ப படுகிறது. உலகத்தில் எந்த நாட்டிலும் அந்நிய நாட்டு மக்களுக்கு குடியுரிமை கேட்கும் வெட்க கேடு எந்த நாட்டிலும் இல்லை வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X