எல்லை படை வீரர்களுக்கு வரன் தேட வசதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எல்லை படை வீரர்களுக்கு வரன் தேட வசதி

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: நாட்டின் எல்லைப் பகுதியிலும், மலை பிரதேசங்களில் கடுமையான சூழலில் பணியாற்றும் தங்களுடைய படையைச் சேர்ந்தவர்கள், தகுந்த ஜோடியை தேர்ந்தெடுக்க உதவும் வகையில், திருமண வரன் பார்க்கும் வசதியை, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை வழங்குகிறது.துணை ராணுவப் படைகளில் ஒன்றான, ஐ.டி.பி.பி.,யில், 90 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சீனாவுடனான எல்லைப் பகுதி
ITBP,unmarried,widowed,troops,LAC,எல்லைபடை,வீரர்கள்,வரன்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நாட்டின் எல்லைப் பகுதியிலும், மலை பிரதேசங்களில் கடுமையான சூழலில் பணியாற்றும் தங்களுடைய படையைச் சேர்ந்தவர்கள், தகுந்த ஜோடியை தேர்ந்தெடுக்க உதவும் வகையில், திருமண வரன் பார்க்கும் வசதியை, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை வழங்குகிறது.

துணை ராணுவப் படைகளில் ஒன்றான, ஐ.டி.பி.பி.,யில், 90 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சீனாவுடனான எல்லைப் பகுதி மற்றும் மலைப் பிரதேசங்களில் இந்தப் படையினர் பணியாற்றுகின்றனர். இந்தப் படையில், கணவன் மற்றும் மனைவி பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு, 333 ஜோடிகள், இந்தப் படையில் பணியாற்றுகின்றனர். மேலும், இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், படையில் உள்ள திருமணமாகாதோர், விவாகரத்து செய்தோர், துணையை இழந்தோருக்கு உதவும் வகையில், திருமண வரன் பார்க்கும் வசதியை, ஐ.டி.பி.பி., வழங்குகிறது.


latest tamil news



இதற்காக, ஐ.டி.பி.பி., இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளோர் அதில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வோரின் பணி தொடர்பாக கொடுக்கப்பட்ட விபரங்கள், அதில் இடம்பெறும். அதனால், பொய் தகவல்கள் கொடுத்து ஏமாற்ற முடியாது. கடந்த, 9ம் தேதி முதல் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள், 150க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X