பொது செய்தி

இந்தியா

7வது பொருளாதார கணக்கெடுப்பு 2020 மார்ச்சில் முடிவடையும்

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'நாடு முழுவதும் நடந்து வரும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி 2020 மார்ச்சில் முடிவடையும்' என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் 1977ல் பொருளாதார கணக்கெடுப்பு முறை அறிமுகமானது. இதில் ஒவ்வொரு குடும்பத்தினரின் பொருளாதார வசதி நிறுவனங்களின் நிதியாதாரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த

புதுடில்லி: 'நாடு முழுவதும் நடந்து வரும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி 2020 மார்ச்சில் முடிவடையும்' என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 1977ல் பொருளாதார கணக்கெடுப்பு முறை அறிமுகமானது. இதில் ஒவ்வொரு குடும்பத்தினரின் பொருளாதார வசதி நிறுவனங்களின் நிதியாதாரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்.



latest tamil news



இந்த புள்ளிவிபரங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

இப்பணியில் கள ஆய்வாளர்கள் வீடு வீடாகச் சென்று புள்ளிவிபரங்களை சேகரிப்பர். அதுபோல நிறுவனங்களின் பொருளாதார தகவல்களும் சேகரிக்கப்படும். இந்த வகையில் ஆறு முறை பொருளாதார கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு
பணி இந்தாண்டு ஜூலை 29ல் திரிபுராவில் துவங்கியது.


latest tamil news



டில்லியில் பொருளாதார கணக்கெடுப்பு பணியை மத்திய புள்ளியியல் திட்ட துறையின் டைரக்டர் ஜெனரல் ஏ.கே.சாது துவக்கி வைத்து பேசியதாவது: முதன் முறையாக பொருளாதார கணக்கெடுப்பு பணி மின்னணு முறையில் நடைபெறுகிறது. இதற்காக புள்ளியியல் அமைச்சகம் மத்திய அரசின் பொது சேவை மைய மின்னணு நிர்வாக சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.



பொருளாதார கணக்கெடுப்பிற்கு பிரத்யேக 'ஆப்' பயன்படுத்தப்படுகிறது. அதனால் துல்லியமான தகவல்களை பெற முடியும் என்பதுடன் அவற்றை பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும்.
ஏற்கெனவே 20 மாநிலங்களில் பொருளாதார கணக்கெடுப்பு பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்ற 1.50 லட்சம் கள ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
7வது பொருளாதார கணக்கெடுப்பு 2020 மார்ச்சில் முடிவடையும்

இவர்கள் வீடுகளுக்கும் 35 லட்சத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும் சென்று புள்ளி விபரங்களை சேகரித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நாடு முழுவதிலும் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இப்பணி முடிய இரு ஆண்டுகள் ஆகும். இது மின்னணு முறையால் ஆறு மாதங்களாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-டிச-201908:09:06 IST Report Abuse
ஆரூர் ரங் நாட்டில் வருமானவரி தாக்கல் செய்பவர்களில் சுமார் 6500 பேர்தான் தமக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சொந்தமாக உளளதாகக் கூறியுள்ளனராம். அப்போ வாடகை வீடுகளில் குடியிருக்கும் கோடிக்கணக்கானோர் பொய் சொல்கின்றனரா? .இதுதான் பொருளாதாரக் கணக்கீட்டிலும் எதிரொலிக்குமோ? ஒழுங்காக கணக்குக்காட்டி வரிகட்டச்சொல்லும் அரசுக்கு எதிர்ப்பு கடுமையாகத்தான் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X