டில்லி போராட்டம்; மாணவர்கள் விடுவிப்பு

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் இன்று ( திங்கட்கிழமை) அதிகாலை நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தலைநகர் டில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறை கும்பலை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். சம்பவத்தின் போது நான்கு பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் மாணவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


போராட்டத்தின் போது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு கல்காஜி போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்

தொடர்ந்து ஞாயிற்று கிழமை இரவில் டில்லி சிறுபான்மை ஆணையத்தினர் காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் டில்லி சிறுபான்மை ஆணையம் இன்று ( திங்கட்கிழமை)மாலை 3 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கல்காஜி போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த 35 மாணவர்கள் மற்றும் நியூ பிரண்ட் ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த 25 மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை ) அதிகாலை நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
16-டிச-201916:34:47 IST Report Abuse
vnatarajan இந்த மாணவர்கள் பொது சொத்துக்களை நாசப்படுத்தியிருந்தால் அவர்களிடமிருந்து தேவையான நஷ்டயீடுகளை வசூலித்தபின்தான் இவர்களை விடுவித்திருக்கவேண்டும். சிறுபான்மை ஆணையம் சொத்துக்களை சேதப்படுத்தியத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள் போல தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Nalla Paiyan - karaikal,இந்தியா
16-டிச-201914:13:09 IST Report Abuse
Nalla Paiyan தேசத்தின் சொத்துக்களை அழிப்பவர்களுக்குத் துணைபோகிறதா சிறுபான்மை ஆணையம்...>???????
Rate this:
Share this comment
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201909:50:36 IST Report Abuse
ganesh CAB has really exposed the internal terrorists in the country. These terrorists living in our own surrounding is more dangerous than pak terrorists.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X