நிர்பயா சம்பவத்திற்கு பின்னும் டில்லி பெண் போலீஸ் பற்றாக்குறை

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் பெண் போலீசார் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுவதால் பாலியல் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.






டில்லியில் நிர்பயா சம்பவம் நிகழ்ந்து 7 ஆண்டுகள் ஆன போதிலும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவே செய்துள்ளது. சட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் அதிகரித்த நிலையில் அது குறித்த வழக்கை விசாரிப்பதற்கான பெண் போலீஸ் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

டில்லியில் கடந்த 2011-ல் 572 பாலியல் வழக்கு பதிவாகி உள்ளது. 2018-ல் 2,135 வழக்குகளாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2011-ல் போலீசாரின் எண்ணிக்கை 67 ஆயிரம் ஆக இருந்து 80 ஆயிரம் ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.இதில் பெண் போலீசாரின் எண்ணிக்கை 9,793. இதில் பாலியல் வழக்கை விசாரிப்போரின் எண்ணிக்கை 928 பேர் மட்டுமே .





பெண் அதிகாரி ஒருவர் கூறுகையில் பாலியல் வழக்கு விசாரணையை பொறுத்த வரையில் ஒரு பெண் அதிகாரி 12 முதல் 20 வழக்குகளை விசாரணை செய்ய வேண்டி உள்ளது. இது போன்ற வழக்கு விசாரணையில் பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பதில் உறுதி செய்ய விரும்புகிறோம். ஆனால் அதற்குரிய பெண் அதிகாரிகள் கிடைப்பது இல்லை என்றார். தொடர்ந்து அவர் பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என கூறினார்.

இது குறித்து உ.பி., முன்னாள் டி.ஜி.பி விக்ரம் சிங் கூறியதாவது: ஒரு விசாரணை அதிகாரி ஒரே நேரத்தில் 7 க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க கூடாது . அவர்களுக்கு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய குறைந்த பட்சம் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.மேலும் அவர்கள் குறுகிய காலங்களில் குற்றப்பத்தரிகையை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் தேவையான முயற்சியில் இருப்பதால் அவர்களால் முழுமையாக ஈடுபட முடிவதில்லை என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathyam - Delhi,இந்தியா
16-டிச-201915:42:21 IST Report Abuse
sathyam ஆட்சி கெஜ்ரிவால் கிட்டே . சும்மா கூவதீங்கோ. எங்கே பப்பு ராக்கூழ் கற்பழிப்பு தலை நகர் சொன்னது சரிதான்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-டிச-201913:55:31 IST Report Abuse
Sanny மந்திரிகள், MLA கள், கண்டவங்களுக்கும் கொடுக்கும் பாதுகாப்பு பொலிஸாரை குறைத்துவிட்டால் போதும் பிரச்சனை முடிந்ததும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-டிச-201913:31:00 IST Report Abuse
தமிழ்வேல் டெல்லி போலீசு மத்திய அரசு கையில்தானே ....🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X