இந்தியா அனைவருக்கும் உரியது: பேரணியில் மம்தா பேச்சு

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (73)
Advertisement
MamataBanerjee, Mamata, CAB, Protest, WestBengal, மம்தா,மம்தா பானர்ஜி, பேரணி, குடியுரிமைசட்டம், மேற்குவங்கம்

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதில், பாஜ.,வின் அரசியல் ஒருபோதும் எடுபடாது என்றும் இந்தியா அனைவருக்கும் உரியது என்றும் பேசியுள்ளார்.

பார்லி.,யின் இரு அவைகளிலும் கடந்த வாரம் பெரும்பான்மை ஆதரவுடன் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமானது. இதனை எதிர்த்து அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை., மாணவர்கள் நேற்று (டிச.,15) நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 4 பஸ்கள் மற்றும் 2 போலீஸ் வாகனங்கள் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணமுல் காங்., கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


இந்தியா அனைவருக்கும் உரியது

பேரணியின் முடிவில் மம்தா பேசியதாவது: குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றை திரும்ப பெறும் வரையில் நாங்கள் போராட்டத்தை தொடர்வோம். இந்தியாவில் பாஜ.,வினர் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும் என்றும், மற்ற அனைவரும் வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் அரசியல். அது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் உரியது.
குடியுரிமைச் சட்டம் யாருக்கானது? குடிமக்களான நாங்கள் அனைவரும் வாக்களிக்கவில்லையா? நான் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவை அனுமதிக்க மாட்டேன் என்றதும் தற்போது டில்லி, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், சட்டீஸ்கர், கேரளா உள்ளிட்ட முதல்வர்களும் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதுபோல அனைவரும் கூற வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-டிச-201920:02:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni எல்ல்லோருமே பிராடுகளே தான் அரசியலுக்குவருவது காசு சேர்க்க என்பது எழுதாத சட்டம் இந்தஊழலளே எவனும் நேர்மையுமில்லே தன்னுடையவே முழுங்கும் சாத்தான்களேதான் உண்மையிலே எவண் காசு சேர்க்காதவன் என்று கேள்விவந்தால் காமராசர் கக்கன் ராஜாஜி மோடிஜி என்று சிலபெயர்கள் தவிர மற்ற பணம் பண்ணியவா என்றுதான் ரிசல்ட் வரும்
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201905:55:25 IST Report Abuse
Prem Kumar Mamtha says India is for all. A small correction. India is for Indian only who are settled here till 31 Dec. 2014
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-டிச-201904:04:36 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தானியர்களுக்கும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் இந்தியாவில் இடம் இல்லை. பில் குல் நஹீ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X