டில்லி வன்முறை : தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (33)
Advertisement

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறி உள்ளது. வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.





இந்நிலையில் டில்லி வன்முறை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டும், பேட்டி அளித்தும் வருகின்றனர். அதன் விபரம் :

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் : வன்முறையால் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எந்த விதத்திலும் வன்முறையை ஏற்க முடியாது. போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும். அமைதியான முறையில் போராடுவதே சிறந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வன்முறையை உருவாக்கியவர்கள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்படுவர்.

காங்., பிரியங்கா : மாணவர்களின் குரல்களை மத்திய அரசு ஒடுக்க பார்க்கிறது. சர்வாதிகாரத்தை கடைபிடிக்க முயல்கிறது. அவர்கள் இந்திய இளைஞர்கள், அமைதி காக்க மாட்டார்கள்.





பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் : டில்லியில் நிலைமையை கட்டுப்படுத்த கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசு, சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலட் : மாணவர்களின் இந்த போராட்டம் துரதிஷ்டவசமானது. கண்டிக்கதக்கது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

அசாசுதீன் ஓவேசி : இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக தனி நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.





காங்., ராகுல் : கடுமையான சட்டங்களை எதிர்க்க சத்யாகிரகமே சிறந்த போராட்ட முறை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அமைதியான வழியில் போராடுபவர்களுக்கே ஆதரவு.

திமுக ஸ்டாலின் : டில்லி பல்கலை., மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் வரும் காலத்தில் பதில் சொல்லப்பட வேண்டும். தொடர் போராட்டம் நாடு முழுவதும் ஏற்படுத்தி வரும் இந்த சட்டம் குறித்து பா.ஜ., அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காங்., குலாம்நபி ஆசாத்: துணை வேந்தரின் அனுமதியில்லாமல், போலீசார் பல்கலைக்குள் போக முடியாது. அனுமதியின்றி போலீசார் நுழைந்திருந்தால், மத்திய அரசின் பல்கலை என்பதற்காக நுழைந்தார்களா என்பது பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-டிச-201915:06:26 IST Report Abuse
Rafi போராட்டம் வெளியில் நடக்க பல்கலைக்கழகம் உள்ளே அனுமதியின்றி சென்று காவல்துறை தாக்குதல் நடத்தியது ஏற்புடையதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
17-டிச-201910:58:38 IST Report Abuse
ganapati sb இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏதும் இதனால் இல்லை எனும்போது ஏன் குறிப்பிட்ட சில இந்திய வஹாபி இஸ்லாமியர்கள் மற்றும் அதன் வாக்குவங்கியை குறி வைக்கும் திமுக காங்கிரஸ் போன்ற அரசியல்வாதிகள் இதில் தேவை இல்லாத அரசியல் செய்து அப்பாவிகளான இளைய இஸ்லாமிய மாணவர்களிடமும் வன்முறையை தூண்டுகிறார்கள்? இவர்கள் காஸ்மீரில் இளஞ்சர்கள் படிக்காமல் தீவிரவாதிகளால் தூண்டப்பட்டு கல்லெறிந்தது போல பின்னோக்கி செல்லவேண்டுமா அல்லது படித்த இந்திய இஸ்லாமியரின் அடையாளம் அப்துல்கலாம் போல் நடிகர்கள் அமீர்கான் ஷாருக்கான் சல்மான் கான் போல முன்னோக்கி செல்ல வேண்டுமா.
Rate this:
Share this comment
Cancel
17-டிச-201907:23:41 IST Report Abuse
சூரியா போராட்டத்தில் முன் நின்று நடத்திய அதே பெண்களின் வீடியோ டிசம்பர் 14 முதல் 16 வரை மூன்று வெவ்வேறு இடங்களில்/ நகரங்களில் காணப்படுகி ன்றன. அரசியல்வாதிகளின் கைக்கூலிகளா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X