வன்முறை, போராட்டங்கள் வருத்தமளிக்கிறது : மோடி

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (67)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் வன்முறை போராட்டங்கள் வருத்தமளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.





இது தொடர்பாக மோடி பதிவிட்டுள்ள டுவீட், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம், வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இவை மிகவும் வருத்தமளிக்கிறது. விவாதம், ஆலோசனை மற்றும் எதிர்ப்பு ஆகியன ஜனநாயகத்தின் அவசியானவை. ஆனால் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும், பொது சொத்தை சேதப்படுத்துவதும் நமது பண்பாடு இல்லை.




பெரும்பான்மை ஆதரவுடன் பார்லி.,யின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும், எம்.பி.,க்களும் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்தியாவின் பல நூற்றாண்டு கால இரக்கம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை விளக்குவதாக இந்த சட்டம் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனையும் பாதிக்காது என உறுதி அளிக்கிறேன். இந்த சட்டம் குறித்து இந்தியர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள், இந்தியாவை தவிர போக வேறு இடம் இல்லாதவர்களுக்காக மட்டுமே இந்த சட்டம்.




இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நம்மை பிரித்து, தொந்தரவு செய்யும் யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது. அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை காக்க வேண்டிய நேரம் இது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை யாரும் பரப்பவோ, அவற்றை நம்பவோ வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி உண்மையைச் சொல்வதென்றால் இந்திய மக்கள் அனைவரும் தமிழகம் உட்பட நமது நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களின் மனநிலையை நன்கு அறிந்துள்ளார்கள். அவர்களது மனம் எப்போதும் முஸ்லிம்களைத் தான் நினைத்துக் கொண்டிருக்கும். இருக்கும் நாட்டைப் பற்றியது அல்ல.
Rate this:
Share this comment
Ayyangar - HYDERABAD,இந்தியா
17-டிச-201907:02:26 IST Report Abuse
Ayyangarநீ உன் மதத்தை பத்தி மட்டும் நெனைக்கிறப்போ அவங்க நெனைக்கிறதுல என்ன தப்பு?...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-டிச-201902:41:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //பெரும்பான்மை ஆதரவுடன் பார்லி.,யின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது. //. நேரடியாக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-டிச-201902:35:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த பிரச்சினையை தீர்க்க ரொம்ப சுலபமான வழி இருக்கு. திரும்பவும் ரூபா நோட்டு எல்லாம் செல்லாதுன்னு சொன்னா போதும். எல்லா பயபுள்ளையும் ஏடிஎம் வாசலுக்கு ஓடிடுவானுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X