உன்னாவ் பாலியல் வழக்கில் எம்எல்ஏ குற்றவாளி: கோர்ட் அதிரடி

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (80+ 17)
Advertisement
உன்னாவ், பாலியல், எம்எல்ஏ, குற்றவாளி, பாஜ, குல்தீப்சிங்செங்கார், டில்லி, நீதிமன்றம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் பலாத்கார வழக்கில் பாஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ., குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என டில்லி கோர்ட் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் வரும் டிச.,19ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் என்ற இடத்தில் இளம்பெண் ஒருவர், 2017ம் ஆண்டு பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ., எம்எல்ஏ., குல்தீப்சிங் செங்கார் தன்னை கடத்திச் சென்று, பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். தற்போது 19 வயதாகும் அப்பெண், தனது புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக கூறி, முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பு தீக்குளிக்க முயன்றார்.
இதனையடுத்து குல்தீப்சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து, 2018ம் ஆண்டு இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வழக்கறிஞரும், உறவுக்கார பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.




பா.ஜ., எம்எல்ஏ., தன்னை மிரட்டுவதாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அப்பெண் கடிதம் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து குல்தீப்சிங் மீண்டும் கைது செய்யப்பட்டார். பாஜ., கட்சியிலும் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து இன்று (டிச.,16) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை விவரம் வரும் டிச.,19ம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (80+ 17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
17-டிச-201911:21:56 IST Report Abuse
mohan அரசியல் கட்சிகள் செய்யும் தவறு.. வட இந்தியாவில்... ஓட்டுக்காக, சட்ட திட்டங்களை, முழுமையாக கடைபிடிப்பதில்லை.. ரயில்வே துறையில் இருந்து... வட இந்தியாவில் தினசரி passanger / எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கால்வாசி டிக்கெட் எடுப்பதில்லை...இன்னும் பல... இதே போல் தான் சட்டம் ஒழுங்கும்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-டிச-201902:13:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவனை ஒரு வருஷம் வழக்கே போடாமல் பாதுகாப்பு கொடுத்து அழகு பாத்த யோகியை என்ன செய்யப்போகிறது இந்த நீதிமன்றம்..
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
16-டிச-201922:02:47 IST Report Abuse
Krishna ItsGreatThatCourtConvictedRulingPartyMenWhyNotEncounterThemIfScapeGoatsCanBeEncountered-Let there be Quick & Maxm Punishment (incl. Death) to Real Accused (Instead of Scape-Goats propped-up to Cover-Up natural Failures of Police Investigations) through Fast-Track But Neutral-Unbiased Investigation & Courts (possible within 01-06months). Even Vested & Conspiratorial Media (Mal-Propaganda by Sensational News Hungry Media), Cheap-Dirty Politicians (for Diverting People From Main Issues), Pro-Ruler & Anti-People Officials (incl. Police etc who also Destroy Evidences), Groups (like Anti-Men & Pro-Women Fanatics Etc) Must also be Fast Punished in Same Trials. Police etc Doing such Cold-Blooded, Unconstitutional Murders to satisfy vested Interests Must be Punished With Same Brutal Midnight Encounter-Murders. Atleast SC Must Act V.Quickly to Control Dangerous Deterioration of Law & Order. Its dangerous to Live in Banana Republic. God save the Country.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X