சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி இறப்பில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்

Added : டிச 16, 2019
Share
Advertisement
குளித்தலை: நான்கு மாத கர்ப்பிணி இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அப்பெண்ணின் கணவரை கைது செய்யக்கோரியும், பலியான பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., கீழ்நங்கவரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரெங்கராஜ், 27; தனியார் நிறுவன ஊழியர். பெரம்பலூரை சேர்ந்த பாசமலர் மகள் சிவரஞ்சனி, 23. இவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

குளித்தலை: நான்கு மாத கர்ப்பிணி இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அப்பெண்ணின் கணவரை கைது செய்யக்கோரியும், பலியான பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., கீழ்நங்கவரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரெங்கராஜ், 27; தனியார் நிறுவன ஊழியர். பெரம்பலூரை சேர்ந்த பாசமலர் மகள் சிவரஞ்சனி, 23. இவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சிவரஞ்சனி, 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை, வீட்டில் யாரும் இல்லாதபோது, சிவரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், குளித்தலை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. ரெங்க ராஜ் குளித்தலை போலீசாரிடம் சரணடைந்தார். இந்நிலையில், சிவரஞ்சனி சாவில் மர்மம் இருப்பதாகவும், ரெங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரியும், பெண் வீட்டார், குளித்தலை அரசு மருத்துவமனை முன், மதியம், 12:00 மணியளவில், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது. இதனால், திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, பெண்ணின் தாய் பாசமலர் கூறியதாவது: நேற்று காலை, 10:00 மணியளவில் மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வந்தது. இங்கு வந்து பார்த்தால் மகளின் உடைகள் கிழிந்த நிலையில் சடலமாக பார்த்தேன். என் மகளை அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டனரா என்ற சந்தேகம் உள்ளது. இறப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X