பொது செய்தி

இந்தியா

நல்லவேளை நிர்பயா உயிருடன் இல்லை: தாயார் நிம்மதி

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (25)
Advertisement
Nirbhaya, Mother, AshaDevi, Hanging, Convict, நிர்பயா, தாய், ஆஷாதேவி, தூக்கு, குற்றவாளிகள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குற்றவாளிகளை பார்த்து ஒவ்வொரு நாளும் இறப்பதை விட நிர்பயா உயிருடன் இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிச.,16ல் மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்திரவதை செய்யப்பட்ட அவர், பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். பின் மருத்துவமனையில் மாணவி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரையும் கைது செய்யப்பட்ட நிலையில், ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்தார். மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.




மீதமுள்ள வினய் சர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா, அக் ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அக் ஷய் குமார் தவிர, மற்றவர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. அக்ஷய் குமார் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீது, நாளை (டிச.,17) விசாரணை நடக்க உள்ளது. இதில் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், டில்லி நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கை, டிச.,18ல் விசாரிக்கவுள்ளது.




இந்நிலையில், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கண்ணீருடன் அவர் பேசியதாவது: 2012ம் ஆண்டு முதல் என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என 7 ஆண்டுகளாக பொறுமையாக போராடி வருகிறேன். குற்றவாளிகளை பார்த்து ஒவ்வொரு நாளும் இறப்பதை விட நிர்பயா உயிருடன் இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோர்ட்டில் குற்றவாளிகளை பார்க்கும் ஒவ்வொரு நாளும் நான் சாகிறேன். இவ்வாறு ஆஷா தேவி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-டிச-201915:11:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni இயற்கையின் கோடை மரணம் கொலை என்பது கொடூரமானது அன்னையே பெர்ரவாலுக்கேதான் தெரியும் தன மக்களின் அருமை கொலையென்றாலும் உம்மம்மாக்கள் பட்ட மரணவேதனை எண்ணிப்பார்க்கவே மனம்பதறுது சிறுவன் என்றுஒருவனை விடுவிச்சங்களே கோர்ட்டுலே அந்தமூதேவியைத்தான் கண்டதுமே சுட்டுத்தள்ளிருக்கவேண்டும் அந்தப்பெயமகன் செய்தது மஹாகொடூரம் நன்னாயிருக்கமாட்டான் அம்மா அவனை நிச்சயம் காட்டுவிலங்குகளோ வெறிநாய்களோ கடிச்சுக்குதறி சாகடிச்சுருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
21-டிச-201915:20:17 IST Report Abuse
Tamilan ரொம்ப வேதனையாக உள்ளது ......."அரசன் அன்று கொல்வான்....தெய்வம் நின்று கொல்லும் ".....
Rate this:
Share this comment
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
19-டிச-201909:22:07 IST Report Abuse
Thalaivar Rasigan மனித உரிமை - கட்சிகளின் அரசியல் என்பவர்கள் இந்த தாய்க்கு என்ன பதிலை தர போகிறீர்கள்? என்கவுண்டர் செய்தால் என்ன தவறு? இப்படியே போய்கிட்டு இருந்தால் மக்களே தீர்ப்பை அளிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X