சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமியார் தலையை கடித்த மருமகள் கைது

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் குடும்ப சண்டையில் மாமியார் தலையை கடித்த மருமகள் கைது செய்யப்பட்டார். மாமியாரின் தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மின்நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரி, (வயது 62). பத்திர எழுத்தாளரான இவருக்கு சரவணக்குமார், 38, என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Coimbatore, MotherinLaw, DaughterinLaw, Pollachi, கோவை, பொள்ளாச்சி, மாமியார், மருமகள்

இந்த செய்தியை கேட்க

கோவை: கோவை மாவட்டத்தில் குடும்ப சண்டையில் மாமியார் தலையை கடித்த மருமகள் கைது செய்யப்பட்டார். மாமியாரின் தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மின்நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரி, (வயது 62). பத்திர எழுத்தாளரான இவருக்கு சரவணக்குமார், 38, என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரவணக்குமாருக்கு நிரந்தர வேலை என எதுவும் இல்லாததால் அவ்வப்போது நாகேஸ்வரிக்கு உதவி புரிந்து வந்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்தி வந்துள்ளார். அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் கணவன், மனைவி இடையே பல நாட்களாக தகராறு நடந்து வந்தது.


latest tamil news



சில நாட்களுக்கு முன்பு, மனைவியுடனான சண்டையில், சரவணக்குமார் தனது தாயார் நாகேஸ்வரி வீட்டிற்கு சென்றார். இதனால் மகன் நிலை குறித்து கவலையுற்ற நாகேஸ்வரி, மருமகள் கல்பனா வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது .
இந்நிலையில், இன்று (டிச.,16) நாகேஸ்வரி வீட்டிற்கு சென்ற கல்பனா, வாக்குவாதம் செய்தனர். இதில் கோபத்தில் மாமியாரின் தலையை கடித்தார். காயமடைந்த அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக மகாலிங்கபுரம் போலீசார் மருமகள் கல்பனாவை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
17-டிச-201915:45:47 IST Report Abuse
Loganathaiyyan அம்மாடி எவ்வளவு நாள் பகையோ இது திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து அடக்கி வைத்து இப்போது வெளியில் காட்டியிருப்பாள் இந்த மறு மகள்
Rate this:
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201910:39:51 IST Report Abuse
ManiS Yemmaa kadichadhoda vitta?
Rate this:
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201910:39:45 IST Report Abuse
ManiS Yemmaa kadichadhoda vitta?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X