‛‛வா வாத்யாரே வூட்டாண்டே''

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (10)
Advertisement





நீண்ட நாளைக்கு பிறகு வாய்விட்டு கண்ணில் நீர் வரும் வரை சிரிக்கும்படியான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.





நடத்தியவர் 91 வயதான பெரியவர் உடையார்பாளையம் ஆர்.சீனிவாசன்.
சென்னை தி.நகரில் கடந்த 90 ஆண்டுகளாக இயங்கிவரும் ‛ஸ்டெனோ கிராபர்ஸ் கில்டு' அமைப்பின் சார்பில ஒவ்வாரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெறுகிறது.




பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் யார் வேண்டுமானாலும் ஜோக் சொல்லலாம் என்பது ஒரு சிறப்பு.சொல்லக்கூடிய ஜோக் பிறர் மனம் புண்படாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே விதி.
இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்தான் 91 வயது ஆர்.சீனிவாசன்.சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு முன்னாள் ரயில்வே ஊழியர்.இளம் வயதிலேயே விகடம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது நண்பர்களுக்கு நடுவில், உறவினர்கள் வீட்டில் என்று விகடக்கச்சேரி செய்ய ஆரம்பித்து ஆதரவு பெருகவே மேடை ஏற ஆரம்பித்தார்.
பறவைகள் மிருகங்களின் சத்தத்தோடு,பிரபல பாடல்களை எடுத்துக் கொண்டு அதை மாறுபட்ட ராகங்களில் பாடுவது,அப்பா-பிள்ளை போல உரையாடுவது என்பது இவரது விகடக்கச்சேரியின் தனிச்சிறப்பு.கச்சேரியில் நிறைய நல்ல விஷயங்களை கோடிட்டு காட்டுவார்.
இப்படி பலரும் ரசிக்கும் விகடகவியாக உருவான இவரைப்பற்றி கேள்விப்பட்ட இயக்குனர் பாலசந்தர் தன்னுடைய ‛அவள் ஒரு தொடர்கதை' படத்தில் இவரை பயன்படுத்திக் கொண்டார்.
அந்தப்படத்தில் வரும் ‛கடவுள் அமைத்து வைத்த மேடை' என்ற பாடலில் இடம் பெற்ற குயில்,யானை,கன்று,வீணை,தவில்,தவளை,சலங்கை உள்ளீட்ட பலவித மிமிக்ரி சத்தம் இவர் கொடுத்ததுதான்.
இந்தப்பாடல் வெளிவந்து கிட்டத்தட்ட 41 வருடமாகிவிட்டது ஆனாலும் இப்போது கேட்டாலும் அந்தப்பாடல் ரசிக்கும் படியாக இருக்கும்.இவர்தான் அந்த பாடலில் இடம் பெற்ற பலகுரல்களுக்கு சொந்தக்காரர் என்று தெரிந்த பிறகு அவர் மீதான மரியாதை இன்னும் கூடியது.
பார்த்த வேலைக்குதான் ஒய்வே தவிர நான் செய்துவரும் விகடக்கச்சேரிக்கு கிடையாது என்றபடி முன்னிலும் பிசியாக விகடக்கச்சேரி செய்துவந்தார்,வருகிறார்.அப்பா போதும்பா வயசாயிடுச்சு ஒய்வு எடுங்க என்று பிள்ளைகள் சொன்னாலும் நாலு பேரை சிரிக்க வைப்பது என்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம் அதைவிடுவானேன் என்றபடி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களம் கண்டு வருகிறார்.
அன்றைய நிகழ்ச்சியில் வா வா வாத்யாரே வீட்டண்டே நீ வாரங்காட்டினா விடமாட்டேன் என்ற பாடலை இவர் பாகவதராக மாறி பல்வேறு ராகங்களில் பாடிய போது சிரிக்காதவர்களே கிடையாது.மேலும் அன்றைய சிறப்பு விருந்தினர்கள் கார்த்திகேயன்,சந்திரசேகரன் ஆகியோரின் விருப்பத்திற்கு கேற்ப மான் மயில் தவளை உள்ளீட்ட பல்வேறு பறவைகள் மிருகங்களின் ஒலியையும் தத்ரூபமாக எழுப்பி கைதட்டலை பெற்றார்.
நேர்மையான எளிமையான எதார்த்தமான வாழ்க்கைதான் என் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்று சொல்லும் இவரது மகன் டாக்டர் எஸ். சேகர்தான் திநகர் ஹூயூமர் கிளப்பின் தலைவர் இவரது எண்:9790775571.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
20-டிச-201916:43:33 IST Report Abuse
vnatarajan திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் நூறு ஆண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். சீனியர் சிட்டிசன் மற்றும் அநாதையர் ஹோம்களுக்கு சென்று அவர்களையும் சிரிக்கவைக்கலாமே. /
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
20-டிச-201910:07:59 IST Report Abuse
ganapati sb அருமை கடவுள் அமைத்து வைத்த மேடை பாடல் சப்தங்களுக்கு உரிய விகடகவிக்கு வந்தனங்கள்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
19-டிச-201904:59:08 IST Report Abuse
oce பெரியவர் சீனிவாசன் நூறாண்டுக்கு மேலும் வாழ்க என வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X