தேர்தல் ஆணையருக்கு எதிராக தி.மு.க., கோர்ட் அவமதிப்பு வழக்கு

Updated : டிச 18, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (9)
Advertisement
தேர்தல் ஆணையர்,  தி.மு.க., கோர்ட் அவமதிப்பு வழக்கு

புதுடில்லி: தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது.

தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:உச்ச நீதிமன்றம் தமிழக ஊரக உள்ளட்சி தேர்தல் தொடர்பாக டிச. 6 மற்றும் 12ல் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.அதில் 1995ம் ஆண்டு தமிழக பஞ்சாயத்து சட்டம் பிரிவு 6ன்படி தேர்தல் நடத்தும் போது மாநில அரசும் தேர்தல் ஆணையமும் அனைத்து தொகுதிகளிலும் விகிதாச்சார முறைப்படி இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தேர்தல் ஆணையர் டிச. 7ல் தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை.

மாறாக 1991ம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழைய முறையிலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.ஆகவே வேண்டுமென்றே உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
17-டிச-201920:06:52 IST Report Abuse
R KUMAR உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் என்று சந்துக்குசந்து ஒப்பாரி வைக்கவேண்டியது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், எப்படி நிறுத்தலாம் என்று பார்க்கவேண்டியது. என்ன அரசியலப்பா?
Rate this:
Share this comment
Cancel
chandkec - singapore,சிங்கப்பூர்
17-டிச-201916:33:38 IST Report Abuse
chandkec தேர்தல் நடக்கவேண்டும் விதிப்படி மட்டும். இன்று இதை செய்யும் அரசு நாளை வேறுவிதமாகவும் மக்களை பாதிக்கும் வேலையை செய்யலாம். கட்சி பார்க்காமல் எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
17-டிச-201913:37:33 IST Report Abuse
blocked user திமுகவுக்கு தேர்தலை நிறுத்த வேண்டும். வேறு ஒன்றும் முக்கியம் அல்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X