'லிஸ்ட்'டில் மூடுமந்திரம்... ஆளுங்கட்சியில் தந்திரம்!

Updated : டிச 17, 2019 | Added : டிச 17, 2019
Advertisement
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவ்வழியே சென்ற சித்ராவும், மித்ராவும், கடைசி நேர பரபரப்பு காட்சிகளை பார்த்து கொண்டிருந்தனர்.அப்போது ஓரமாக நின்றிருந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தர், ''சொைஸட்டி எலக்ஷனை விட, உள்ளாட்சி தேர்தல் ரொம்ப மோசம்பா. யூனியன் கவுன்சிலர், டிஸ்ட்ரிக்ட்
சித்ரா, மித்ரா, திருப்பூர்

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவ்வழியே சென்ற சித்ராவும், மித்ராவும், கடைசி நேர பரபரப்பு காட்சிகளை பார்த்து கொண்டிருந்தனர்.அப்போது ஓரமாக நின்றிருந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தர், ''சொைஸட்டி எலக்ஷனை விட, உள்ளாட்சி தேர்தல் ரொம்ப மோசம்பா. யூனியன் கவுன்சிலர், டிஸ்ட்ரிக்ட் கவுன்சிலர் லிஸ்ட் வெளியிடுவதற்கு பெரிய பந்தா பண்றாங்கப்பா,' என, மொபைல் போனில் கத்தி கொண்டிருந்தார். அதைக்கேட்ட மித்ரா, ''என்னக்கா, ஆளுங்கட்சியில புகைச்சல் அதிகமாயிடுச்சு போல...!'' கேள்வி எழுப்பினாள்.

''ஆமான்டி மித்து. லிஸ்ட் எப்ப தருவீங்கன்னு ரத்தத்தின் ரத்தங்கள் கேட்டதற்கு, 'இதோ, பத்து நிமிஷத்துல வந்துடும்,'னு சொல்லியே ஒரு நாளைஓட்டிட்டாங்களாம்,''

''ஆனா, மாவட்ட செயலாளர் நியமிச்ச வேட்பாளரை வரச்சொல்லி, 'பார்ம் ஏ, பி' குடுத்திட்டாங்க. எதுக்கு இந்த மூடுமந்திரம்? வேட்பாளர் யார்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே?னு,' பலரும் பொறிஞ்சு தள்ளிட்டாங்களாம். அதிலும், 'மாஜி'யோட ஆட்கள்தான், அதிகளவில் 'கேன்டிடேட்' ஆயிட்டாங்களாம்,''

''ஓ... அதனாலதான், புகையுதோ?'' என்ற மித்ரா, ''வில்லேஜ் பிரசிடென்ட்டுக்கு கடும் போட்டியாமா?'' கேள்விகேட்டாள்.''யெஸ் மித்து. பல கிராமங்களில், ஆளுங்கட்சியிலயே ரெண்டு பேர், மூணு பேர் போட்டியிடுறாங்களாம். எப்படியும் யாராவது ஒருத்தர் ஜெயிச்சு வருவாரில்ல. அப்புறம் பார்த்துக்கலாமுன்னு, கட்சியில சொல்லிட்டாங்களாம்,''

''அப்படியிருந்தும், ரெண்டு, மூணு தடவை விட்டுக்கொடுத்து, இளைஞர்களுக்கு வழி விடுங்கன்னு சொல்லியிருக்காங்களாம். ஆனா, ஒருத்தரும் கேட்லை,'' என்ற சித்ரா கூறிய போது, அவ்வழியே வந்த, கலெக்டர் கார், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் சென்றது.

''ஏண்டி மித்து, கலெக்டரின் செயல்பாடு எதிர்பார்த்த மாதிரி இல்லைனு, சமூகவலைதளங்களில் தகவல் பரவுதாம். ஏதாச்சும் தெரியுமா?''

''உண்மைதாங்க. அவரு வந்த புதுசில், மாவட்டத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும், 'வாட்ஸ் ஆப்' மூலமாக புகார் கொடுங்கன்னு அறிவிச்சாங்க. ஆனா, அப்படி அனுப்பி இதுவரைக்கும் ஒண்ணும் செய்யலைன்னு, 'நெட்டிஷன்'கள் சமூக வலைதளங்களில் போட்டு தாக்கறாங்களாம்,''

''மக்களுக்கு செய்றேன்னு, சொல்லக்கூடாது, செயலில் காட்டணும்,'' என, சித்ரா சொல்லி கொண்டிருக்கும் போது, அருகிலிருந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த சிலரை, போலீசார் 'லாட்டரி' கட்டுடன் அழைத்து சென்றனர்.''

அக்கா... சொல்ல மறந்துட்டேன். விழுப்புரத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செஞ்சதற்கு அப்புறம், லாட்டரி விக்கிறவங்களை தேடித்தேடி அரெஸ்ட் பண்றாங்க,''''அதில, ஆளுங்கட்சி பிரமுகர்கள்தான், அதிகம் லாட்டரி விக்கிறாங்க. இதுவரைக்கும் 'மாமூல்' வாங்கிட்டிருந்த போலீசார், இப்பதான், வேலை செய்ய ஆரம்பிச்சு, வளைச்சு வளைச்சு புடிக்கிறாங்களாம். முக்கியமா, 42வது வார்டு, கரட்டாங்காட்டை சேர்ந்த, ரெண்டு பேர் சிக்கியதால், அப்பகுதி மக்கள், நிம்மதி பெருமூச்சு விடறாங்களாம்,''

''இப்பவாவது, புடிச்சாங்களே, சந்தோஷம்தான் மித்து,'' என்ற சித்ரா, ஒலித்த மொபைல் போனை அட்டென்ட் செய்து, ''ஆன்ட்டி, நல்லாயிருக்கீங்களா? ஓ... அந்த மேட்டரா, இருங்க பேசிடறேன்,'' என்று கூறி அணைத்தாள்.''என்னங்க்கா, விஷயம்?'' ஆர்வமானாள் மித்ரா.

'பத்து வருஷம் பணியாற்றிய, பட்டதாரி, புரமோஷன் கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில், 6 சதவீதம் ஊக்கப்பணம் கொடுக்கிறாங்க. இதுக்கு, டிரஸ்ஸரி மற்றும் டி.இ.ஓ., ஆபீசில் இருக்கிற சிலரும், 10 சதவீதம் கமிஷன் கேட்கிறாங்களாம்,''

''கொடுக்காதவர்களிடம், 'என்ன முடியாதா? உங்க அப்ளிகேஷன் உங்களுக்கே திரும்பி வரும், பார்த்துக்கங்கன்னு, மிரட்டறாங்களாம்டி,''

''இது என்ன பகல் கொள்ளையா இருக்கு. புதுசா, வந்திருக்கற உயரதிகாரிதான், இதுக்கு ஒரு 'புல் ஸ்டாப்' வைக்கணும்,''னு சொன்னாள் மித்ரா.மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், ''வாடி மித்து, வேற வழியில போகலாம்,'' என்றதும், அவளும் புறப்பட்டாள்.

வண்டியை ஓட்டியபடியே சித்ரா, ''தெற்கு ஆர்.டி.ஓ., ஆபீசில், ஒருவர், அதிகாரியை மிஞ்சும் அளவுக்கு அதிகாரம் செய்றாராம். யார், வந்தாலும், 'டேபிளை தொடாமல் பேசுங்க. செல்போன் பார்த்துட்டு பேசாதீங்க'ன்னு, கண்டிஷன் போடறாராம்,''

''அடடே... பரவாயில்லையேன்னு சொல்லாதே. முழுசையும் கேட்டுட்டு சொல்லுடி. கனகச்சிதமா, 'பேப்பர்' வாங்கிட்டு, அதிகாரிக்கும், சப்ளை பண்ணிடறாராம். ஆனா, பார்த்தா, அப்படி தெரியாது,'' என்று கூறிய சித்ரா, 'ஜெ.சந்திரன்' பேக்கரி முன், வண்டியை நிறுத்தினாள்

.''அக்கா... நானே சொல்லலாமுன்னு இருந்தேன்,'' என்ற மித்ரா, ''ஸ்ட்ராங்க்கா, ரெண்டு டீ,'' என்று ஸ்டூலில் அமர்ந்தாள்.டீ குடித்து விட்டு இருவரும், புறப்பட்டனர்.''ஓ... அப்படியா, சங்கதி?''''ஆமாங்க்கா, இதனால, லாட்டரி, சரக்கு விற்கிறவங்க, மேல எந்த புகார் போனாலும், கண்டுக்கறதில்லையாம்,''

''இதனை பெரிய அதிகாரி காதுக்கு கொண்டு போறதுக்கு, ஒருத்தர் முயற்சி செஞ்சிட்டிருக்காராம். அதே மாதிரி, ரூரல் ஸ்டேஷன்களில், உயரதிகாரியின் அருகிலுள்ள ஒருவர் சொல்றவங்களைத்தான், 'ஒற்றராக' போஸ்டிங் போடறாங்களாம்,''

''அதிலும், குறிப்பா, அவரோட சொந்தபந்தங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு பேச்சு பரவலா அடிபடுது,'' என்றாள் மித்ரா.

''அடடே... நீயும் போலீஸ் மேட்டரை சொல்லி என்னை 'காந்தம்'போல ஈர்க்கிறாய். ஓகே மித்து. உடுமலையில், ரெண்டு, மூணு பேரு, மகளிர் ஸ்டேஷனே 'கதி'ன்னு இருக்காங்களாம்,''

''எப்பவாச்சுன்னா பரவாயில்லை. எப்பவுமே உட்கார்ந்திட்டிருந்தா என்னங்கறது? அவங்க வந்தாலே, எப்படிடா சொல்றதுன்னு சங்கடப்படறாங்களாம்,''

''அக்கா... அவங்களை அந்த அதிகாரி பார்த்துப்பாரு... இவங்க பண்றதை யாரு பார்ப்பாங்க...''''என்னடி, இப்படி பேசறே...''

''இருங்க... புரியற மாதிரி சொல்றேன். 'உள்ளாட்சி தேர்தலுக்கு, கார்ப்ரேஷன்ல உள்ள பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளை, 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க. ஆனா, யாரும் பழைய இடத்தை விட்டு நகர மனசில்லாமல், நங்கூரம் போட்டு உட்கார்ந்திட்டு இருக்காங்க,''

''இப்ப இருக்கற 'பசை'யான இடத்தை விட்டிட்டு, திசை மாறி போவாங்களா?''

''அது அதேமாதிரி, நல்லுார் மண்டல ஆபீசில், பொறியாளர் பிரிவில் 'கனக'மான ஒருத்தர், 15 வருஷமாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திட்டு, 'வாங்கி' தள்றாராம். புரமோஷன் கிடைச்சும், போகலைன்னா பார்த்துக்க. அவருக்கு 'சவுத்'தின் 'குண'மான ஆசியிருக்குறதா சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.

''ம்... என்னத்த சொல்றது. இந்த 'டெங்கு'மேட்டரிலும், அதிகாரிகள் ரொம்ப மெத்தனமாக இருக்காங்கடி,''

''உண்மைதாங்க. இப்போ புதுசா வந்தா அதிகாரி, எதையும் கண்டுக்கறதில்லையாம். காய்ச்சல் நோயாளிகளை எண்ணிக்கை குறைச்சு சொல்லுங்கன்னு, ஆர்டர் போட்டுள்ளார்,''

''ஏற்கனவே, டெங்கு வந்துஅஞ்சு பேர் இறந்திட்டாங்க. இதை தெரிஞ்சுகிட்ட கோவை 'டீன்', இவரை கூப்பிட்டு, போனில் 'காய்ச்சி' எடுத்துட்டராம். அதில, 'காய்ச்சல் நோயாளிகளை திருப்பூரிலேயே வச்சு குணப்படுத்துங்க. இங்க அனுப்பாதீங்கன்னு ஸ்டிரிட்டா சொல்லிட்டார்,''

''இத்தனை நடந்ததுக்கு பின்னாடியும், அவரு, 'தேமே'ன்னுதான் இருக்கார். ஒரு நடவடிக்கையும் இல்லைங்க்கா...'' என்ற மித்ரா, வாட்சை பார்த்தபடி, ''இந்த ஜெகதீஷ்குமார் போன் பண்றேனு சொன்னார்.இன்னும் போன் பண்ணலை,'' என, சலித்து கொண்டாள்.

''இந்த நஞ்சராயன் குளத்தில், ஏற்கனவே, எட்டு கோடி ரூபாயை கொட்டி வீணடிச்சுட்டாங்க. இப்ப மறுபடியும், கோடிகளை கொட்டுனு சொல்றாங்களாம்,''

''இதென்னக்கா அநியாயம்?''''ஆமாண்டி மித்து. ஒரு விவசாயி, பசுமை தீர்ப்பாயத்தில் கேஸ் போட்டாராம். அதனால, ஏரியை மாசுக்கட்டுப்பாடு வாரியம் சீரமைக்கோணும்னு, தீர்ப்பு சொல்லிட்டாங்களாம்,''

''இதை கேள்விப்பட்ட விவசாயிகள், 'மூணு வருஷத்துக்கு முன்னாடி நடத்தப்பட்ட பணிகள் குறித்து விசாரிச்சிட்டு, மறுபடியும் செலவு பண்ணுங்க,'னு சொல்றாங்க,'' என்ற சித்ரா, மித்ராவை அவள் வீட்டில் இறக்கி விட்டு, வண்டியில் பறந்தாள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X