சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதிகளுக்கு கை, கால் முறிவு ஏன்? டி.எஸ்.பி.,க்கள் விசாரணை

Updated : டிச 17, 2019 | Added : டிச 17, 2019 | கருத்துகள் (82)
Share
Advertisement
TN_police,police_station,fractures,police,criminals,bathroom,கைதி

சென்னை: சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில், 225 பேர், கை, கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்ற காரணம் குறித்து, அவர்களை கைது செய்த, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களிடம், விசாரணை நடந்து வருகிறது.

கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைகளில் அடைக்கின்றனர். இவர்களை, போலீசார் பிடிக்க முயலும்போது, சிலர் தப்பிப்பர். அப்போது, கீழே விழுந்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்படுவது உண்டு. சில சமயம், போலீசாரே, இவர்களின் கை, கால்களை முறித்து விடுவர் என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.

இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஒரே மாதிரியாக, கை, கால்கள் முறிந்து, சிறையில் உள்ளவர்கள்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என, 225 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த, 225 பேரை கைது செய்த, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ.,க்களிடம், கை, கால் முறிவுக்கான காரணம் குறித்து, டி.எஸ்.பி.,க்கள் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news



இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: போலீஸ் அதிகாரிகளை களங்கப்படுத்த, குற்றவாளிகளின் குடும்பத்தினர், சில அமைப்புகள், மனித உரிமை மீறிய செயல் என, புகார் அளித்துள்ளனர். அதன் மீதான விசாரணையில், எங்கள் தரப்பு நியாயங்களை விளக்கி வருகிறோம். கைதாவதற்கு முன்பே, விபத்து உள்ளிட்ட பிற காரணங்களால், பலருக்கு காயம் ஏற்பட்டிருந்தது என்பதை, ஆதாரப்பூர்வமாக தெரிவித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-டிச-201920:29:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni திருடும் நாய்களை அடிச்சு உதைக்கவேண்டும் கற்பழில்ப்புலே ஈடுபட்டால் இவங்களை அதை கட் பண்ணிடுங்க தப்பே இல்லீங்க +ஆயுள்தண்டனை ஆனால் நோ சோறு தண்ணீர் வேண்டும்னா அவனுக வீட்டுலேந்துவந்தால் துண்ணுதொலைக்கட்டும் நம்ம அரசாங்கம் ஒருபிடி சோறும்போடவேகூடாது
Rate this:
Cancel
Ashwanth - TIRUCHIRAPPALLI,இந்தியா
21-டிச-201917:19:47 IST Report Abuse
Ashwanth தப்பு செய்து சிறை செல்லும் இவர்களுக்கு இந்த மாதிரி தண்டனையும் கொடுக்கணும் அப்பதான் அடுத்த முறை பயம் வரும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-டிச-201909:24:14 IST Report Abuse
Bhaskaran இந்த மூஞ்சிகளை பெயர்க்காமல் விட்டதுக்கு இந்த கேடு கேட்ட ஜென்மங்கள் காவலர்களுக்கு நன்றி சொல்லணும் .இவர்களுக்கு வக்காலத்து வாங்குவோர் இவர்களினால் பொருளாய் பறிகொடுத்திருந்தாலோ .பிளேடால் கீறப்பட்டிருந்தாலோ அப்போதைய நியாயமே வேறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X