மக்கள் மீதான போர்: சோனியா ஆவேசம்

Updated : டிச 17, 2019 | Added : டிச 17, 2019 | கருத்துகள் (125)
Share
Advertisement
புதுடில்லி: 'பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வன்முறையையும், பிரித்தாளும் அரசியலையும் கையாளுகிறது. சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கிறது' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவது தான், ஒரு அரசின் கடமை. திட்டங்களை நிறைவேற்றுவது,
sonia_gandhi,congress,sonia,President_INC,Indian_National_Congress,சோனியா,காங்கிரஸ்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வன்முறையையும், பிரித்தாளும் அரசியலையும் கையாளுகிறது. சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கிறது' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவது தான், ஒரு அரசின் கடமை. திட்டங்களை நிறைவேற்றுவது, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதும் அரசின் முக்கிய பணி. ஆனால், குடியுரிமை சட்டத்தின் மூலம், சொந்த நாட்டு மக்கள் மீதே, பா.ஜ., அரசு போர் தொடுத்துள்ளது.


latest tamil newsவன்முறையை ஏற்படுத்துவதுடன், பிரித்தாளும் அரசியலையும் கையாளுகிறது. அரசியல் காரணங்களுக்காக மத ரீதியிலான மோதல்களை அரசு உருவாக்குகிறது. வட கிழக்கு மாநிலங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு, பயங்கரவாதி, நக்சல் என, ஆளும் கட்சியினர் முத்திரை குத்துகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
21-டிச-201914:25:18 IST Report Abuse
Arachi ஒரு நண்பர் சட்டம் மக்களுக்கு தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். சட்டத்தை உருவாகிறவர்களே மக்களின் பிரதிநிதிகள் தான். அதன் பிறகுதான் நீதிமன்றத்திற்கு செல்கிறது. உங்களை போன்றவர்களுக்குத்தான் புரியும் நீங்க சமத்து மற்றவர்களெல்லாம் தத்தி. அதனால்தான் இவ்வளவு கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
17-டிச-201921:33:05 IST Report Abuse
Dr.C.S.Rangarajan குடியுரிமை சட்டம் இந்தியாவில் தற்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் குடிமக்களை எந்தஒரு வகையிலும் பாதிக்காத, கருத்தில் கொள்ளாத சட்டம். ஒரு காலத்தில் இந்திய குடிமகனாக இருந்து வெளிநாடுகளுக்கு சென்றோ, அல்லது இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் வாழும் சிறுபான்மையினமான இந்தியர்கள், அந்த நாட்டு மத முறைகள் துன்புறுத்தலாக இருப்பதாக கருதி அகதிகளாக இந்தியாவந்திருப்பவர்களை இந்திய குடிமகனாய் ஏற்றுக்கொள்ளும் வகையை சார்ந்தது குடியுரிமை சட்டம். சட்டத்தை புரிந்துகொள்ளாமல், மக்களின் பிரதிநிதிகள், மக்களவையில் சாதிக்க முடியாததை, 'வீதிகளிலேதான்' சட்டங்கள் உருவததாக கருதினால் 'குற்றம் யாருடையது'? அரசியல் சட்ட மேதைகள் அல்ல வாக்காளர்கள்., மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை அங்கத்தினர்கள்அரசியல் சட்ட வல்லுநர்கள் இல்லை. . அரசியல் சட்டத்திற்கு புறம்பானது குடியுரிமை சட்டமெனில், அரசியல் சட்ட பாதுகாவலன் உச்சமீதிமன்றம் என்பதனால், உச்சநீதி மன்றத்தை அல்லவோ அணுகி இருக்கவேண்டும்? ஓட்டு போடுவதை தவிர வேறொன்றுமறியா மக்களை திசை திருப்பி, வன்முறையில் ஈடுபட வைத்து, கைதானவருக்கு பாதுகாப்பு அளிக்குமா அரசியல் கட்சிகள்?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-டிச-201919:19:16 IST Report Abuse
vbs manian இந்த அம்மையாரின் கட்சி கொண்டு வந்த எமெர்ஜெண்சியை விடவா மோசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X