மெஜாரிட்டி அரசு தவறாக போகக்கூடாது: பிரணாப்

Updated : டிச 17, 2019 | Added : டிச 17, 2019 | கருத்துகள் (73)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஜனநாயகத்தில் அனைத்து மக்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். ஓட்டளித்தவர்கள், ஓட்டளிக்காதவர்கள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. என டில்லியில் நடந்த ஒரு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.






இந்தியா அறக்கட்டளை சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போற்றும் வகையில் நடந்த விழாவில் அவர் பங்கேற்று மேலும் பேசுகையில்; நாட்டில் நாம் அனைவரையும் மதிக்க வேண்டும். எதிர்கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்திய நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்தவராக இருந்தார். தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே கட்சிக்கு அதிக பெரும்பான்மை வழங்கி உள்ளனர். இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது. கடந்த காலத்தில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி இருப்பதையும் நாம் நினைவு கூற வேண்டும் .
பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யலாம் என நினைத்து தவறு செய்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவதை விட மக்களின் ஆதரவுடன் ஆட்சி நடக்க வேண்டும். ஓட்டளித்தவர்கள், ஓட்டளிக்காதவர்கள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. பார்லி., ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் .






ஆயிரமாக உயர்த்த வேண்டும்


லோக்சபா தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் . கடந்த 1971 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது. தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு தொகுதிக்கு 16 லட்சம் பேர் வரை உள்ளனர். இவர்களை ஒரு உறுப்பினர் சந்திப்பது என்பது சிரமமான காரியமும் கூட. பிரிட்டன், கனடா, அமெரிக்காவில் முறையே 650, 443, 535 எம்.பி.,க்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது நமது நாட்டில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஏன் 1000 மாக உயர்த்தக்கூடாது? இவ்வாறு பிரணாப் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-டிச-201911:22:15 IST Report Abuse
மலரின் மகள் ஆம். எம் பி கள் எண்ணிக்கை உயர்த்தப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
17-டிச-201920:27:07 IST Report Abuse
ஆப்பு சரிதான்.. இப்பவே மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இவரோட தாத்தா, பாட்டியின் பிறப்பு சான்றிதழ் இருக்கான்னு கேக்கச் சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
17-டிச-201918:16:25 IST Report Abuse
spr பதவியில் இருக்கும் பொழுது நல்லது செய்ய மனமில்லாதவர்கள் பணிஒய்வு பெற்றபின்னர் இது போல அறிவுரை சொல்வது இந்த நாட்டில் புதியது அல்லவே அந்தக் கும்பலில் இவரும் இணைந்து விட்டார் அந்த வகையில் திரு மோடி பாராட்டப்பட வேண்டியவர் அவரது பல திட்டங்கள் உடனடியாக நன்மை தராது ஆனாலும் தனக்கு கெட்டபெயர் வருமென்று தெரிந்தும், நாட்டிற்கு நெடுநாளில் நலம் தரும் பல திட்டங்களை அதிரடியாக செயல்படுத்துகிறார் இவர்கள் அவரிடம் பாடம் கற்க வேண்டும் ஆட்சியில் இல்லாத பொழுதும், இவர் மோடியின் செயல்பாட்டை நேரடியாக குறை கூற விரும்பாமல் ஆனால் எதிர்க்கட்சிகள் பாராட்டும் வகையில் இப்படியொரு கருத்து கூறுகிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X