அரசியல் செய்தி

தமிழ்நாடு

" அரச பயங்கரவாதம்" - அச்சப்படும் கமல்

Updated : டிச 17, 2019 | Added : டிச 17, 2019 | கருத்துகள் (156)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு மக்கள் நீதி மைய தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்;latest tamil newsநாட்டில் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது, விலைவாசி விண்ணோக்கி செல்கிறது என்ற நிலையில் குடியுரிமை சட்டம் இப்போது கொண்டு வர அவசரம் காட்டுவது ஏன்? இது நாடு முழுவதும் ஒரு துவக்கப்புள்ளி . பாகிஸ்தான் இந்துக்களுக்கு இடம் அளிக்கும் சட்டத்தில் இலங்கை இந்துக்களுக்கு இல்லை. இலங்கை தமிழர்கள் நிலை என்ன ?


கருத்துரிமையின் மீது அடி


கேள்வி கேட்கும் குரலை நெரிப்பது அரசு பயங்கரவாதம். கேள்வி கேட்க அச்சப்பட வேண்டும் என விழும் அடி. மாணவனுக்கு பதில் இல்லை, விவசாயிக்கு வழி இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது மக்களை திசை திருப்ப குடியுரிமை சட்டம் ஏன் என்பதற்கும் பதில் இல்லை. மாணவர்கள் மீது விழும் அடி இந்திய ஜனநாயகத்தின் கருத்துரிமையின் மீது விழும் அடி.


latest tamil newsசட்டத் திருத்தங்களை தனக்கு சாதமாக்கி கொண்ட இவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என இருண்ட சூழல் உள்ளது. ஜனநாயகத்தை நாம் காத்திட வேண்டும். இதற்கு மாறாக உள்ள மக்களுக்கு எதிரான தனிநாயகத்தை ஒழிக்கும் வரை நான் ஓய மாட்டேன். எங்கள் காலுக்குள் பாம்புகள் விடப்படுகிறது. நாங்கள் எங்கள் இளைஞர்கள் பயப்பட மாட்டோம்.
தற்போது தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் துவக்கம் இது. சர்வாதிகாரத்திற்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கிதான் எழ வேண்டும். இவ்வாறு கமல் கூறினார்.


அதிமுக ஆதரவு ; துரோகம்


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அதிமுக ஆதரவு அளித்தது தமிழ் இனத்திற்கும், தேசத்திற்கும் செய்த துரோகம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-டிச-201902:45:28 IST Report Abuse
Indian Dubai Kamal is one of the best idiot & fool. He is a joker and no one cares about him and no need.
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
18-டிச-201914:37:34 IST Report Abuse
Ravi 1. நீங்கள் வடகொரியா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை 12 வருடங்கள் லேபர் வேலையுடன் கூடிய அதிபயங்கர ஜெயிலில் அடைக்கும். 2. நீங்கள் அஃப்கானிஸ்தான் நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் அங்கேயே அந்த இடத்திலேயே சுட்டு தள்ளிவிடுவார்கள் 3. நீங்கள் சவுதி அரேபியா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை எத்தனை வருடங்கள் அடைக்கும் என்பது தெரியாது. 4. நீங்கள் சீனா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் உங்களை சர்வசாதரணமாக கடத்தி உங்கள் உறுப்புகளை பிடுங்கி, அதுக்குப்புறம் நீங்க இருந்தா என்ன? போனா என்ன?? 5. நீங்கள் கியூபா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத அரசியலமைப்பு சட்டம் உங்களை சாகும் வரை அரசியல் கைதி என முத்திரை குத்தி ஜெயிலில் அடைக்கும். 6. நீங்கள் இங்கிலாந்து நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை ஜெயிலில் அடைக்கும். ஜெயில் தண்டனை முடிந்த பிறகு உங்களை உங்கள் நாட்டிற்கே நாடு கடத்துவார்கள். 7. இப்போ நீங்கள் இந்திய நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் வருமாறு... ● ரேஷன் கார்ட் ● பாஸ்ப்போர்ட் (சிறுது அறிவாளிகள் இரண்டொரு பாஸ்ப்போர்ட் கூட வாங்கி வைத்து கொள்வார்கள்) ● ஓட்டுனர் உரிமம் ● வாக்காளர் அட்டை ● கடன் அட்டை ● மானிய விலையில் அரசாங்க வீடு ● சொந்த வீடு வாங்க கடன் ● இலவச படிப்பு ● இலவச மருத்துவம்
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-201911:53:56 IST Report Abuse
Yaro Oruvan கமல் சொல்வது தவறு.. தவறு.. அண்டை நாடுகளில் மத ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளான நபர்களுக்கு குடியுரிமை தரப்படும் என சட்டம் சொல்கிறது.. இலங்கை தமிழர்கள் போராட்டம் என்பது வேறு. தனி நாடு கேட்டு நடக்கும் போராட்டம். அதை எதிர்ப்பதற்கோ ஆதிரிப்பதற்கோ இந்தியாவிற்கு தேவையில்லை. வேண்டுமென்றால் பாகிஸ்தானும் வங்காள தேசமும் இதே போல் சட்டத்தை இயற்றி இங்கு இந்தியாவில் யாரவது முஸ்லீம் கொடுமைப்படுத்த பட்டதாக எண்ணினால் அவர்களுக்கு குடியுரிமை தரட்டும்.. யாரும் செல்ல மாட்டார்கள்.. காரணம் கொடுமை படுத்தப்படவும் இல்லை. மேலும் அங்குள்ள முஸ்லீம்கள் நிலை என்ன என்பது இங்குள்ள முஸ்லீம்களுக்கு நன்றாக தெரியும்.. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இங்குள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு உள்ளது. அண்டை நாட்டில் இருந்து வரும் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை கொடுத்தால் இவர்களுக்கு ஏன் எரிகிறது?? இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.. கான்+கிராஸ் ஆளும் மாநிலங்களிலும் மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளிலும் மட்டுமே வன்முறை நடக்கிறது.. மக்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.. மைனாரிட்டி ஓட்டு வங்கி என்ற விளையாட்டை ஆரம்பித்தவர்கள் தற்போது மெஜாரிட்டி ஓட்டு வங்கி உண்டானவுடன் பீதி அடைகின்றனர்.. விளையாட்டை ஆரம்பிச்சது நீங்கள்.. நாங்க ரெடி விளையாட்டை தொடர... ஆரம்பித்தவர்கள் முடிவு செய்யட்டும் அவர்கள் நிலையை.. ஜைஹிந்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X