குடியுரிமை சட்டத்தில் சமரசமே கிடையாது : அமித்ஷா உறுதி

Updated : டிச 17, 2019 | Added : டிச 17, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement

புதுடில்லி: பாஜ.,வின் வாக்குறுதியான குடியுரிமை சட்டத்தில் சமரசம் செய்யப்போவது இல்லை எனவும், நிர்பயா வழக்கு தாமதமாவதற்கு அரசு பொறுப்பல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.latest tamil news


தனியார் டி.வி. சேனல் ஒன்றிற்கு அமித்ஷா அளித்த பேட்டி: டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை., மாணவர்கள் போராட்டம் எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் ஏற்பட்டது. மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தினை மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் உள்ளிட்ட எந்த குடிமகனையும் பாதிக்காத முறையில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரம் சட்டவிரோதமாக ஊடுருவபவர்களை தடுக்கவே என்.ஆர்.சி. என்ற தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 300 பல்கலை.,களில் 22 பல்கலை.யில் தான் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர், என்றார்.


latest tamil news


மற்றொரு டிவி சேனலுக்கு பேட்டியளித்த அமித்ஷா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது: குடியுரிமை சட்டம் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் அரசை சர்வாதிகாரி என கூறமுடியாது. இந்த சட்டத்தில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை. இது பாஜ.,வின் தேர்தல் வாக்குறுதியாகும். சட்டம் குறித்து அனைத்து வடகிழக்கு மாநில தலைவர்களிடமும் பேசிவிட்டோம்.


latest tamil news


குடியுரிமை சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், அந்த தேர்விலும் இச்சட்டம் வெற்றி பெறும். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மஹா.,வில் மக்களின் தீர்ப்பில் பாஜ., வெற்றி பெற்றது. நிர்பயா வழக்கு தாமதம் ஆவதற்கு அரசும், அதிகாரமும் பொறுப்பல்ல. நீதிமன்ற விவகாரங்களில் பாஜ., தலையிடுவதில்லை. உலக பொருளாதாரத்தின் மந்தநிலையால் இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முகுந்தன் - குழித்துறை ,இந்தியா
18-டிச-201912:54:22 IST Report Abuse
முகுந்தன் எந்த காரணத்தைக்கொண்டும் மக்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கூடாது. அரசுக்கு பெருவாரியான மக்களின் ஆதரவு இன்னும் வலுப்பெறும். ஒருசிலரின் மிரட்டல்களுக்காக பெருவாரியான மக்களின் விருப்பத்தை குழி தோண்டி புதைக்கத் தேவையில்லை. மண்டல் கமிசன் ரிப்போர்ட் அமலாக்கப்பட்ட போதும் இதைவிட பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் அது நடைமுறை படுத்தப்பட்டது. போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
Rate this:
Cancel
Anjali - chennai,இந்தியா
18-டிச-201911:23:41 IST Report Abuse
Anjali அமித்ஷா போல ஆளுமையனா தலைவர்கள் தான் நாட்டுக்கு தேவை இங்கே இருக்குற திராவிட திருடும் அரசியல் வாதிகள் மக்களை ஏமாத்துகிறார்கள் , இந்த சட்டம் இந்தியாவில் வாழும் எல்லோருக்கும் நல்லது , தாய் நாட்டின் மீது பற்று இருப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் ,இதை வைத்து முஸ்லீம் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது காங்கிரஸ் , மம்தா அண்ட் திமுக இவர்கள் இருக்கும் வரை இந்தியா வை வளர விடமாட்டார்கள்
Rate this:
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
18-டிச-201911:16:29 IST Report Abuse
Kumar periyaar மனிதனுக்கு உயிரே நிரந்தரம் கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X