பொது செய்தி

தமிழ்நாடு

டிச.,20 முதல் தொழில் வர்த்தக பொருட்காட்சி

Added : டிச 18, 2019
Share
Advertisement

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 'தொழில் வர்த்தக பொருட்காட்சி' டிச.,20ல் துவங்கி 2010 ஜன.,5 வரை நடக்கிறது.

சங்க தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: 'நுகர்வை நாம் கொண்டாடுவோம்' என்ற முழக்கத்துடன் இந்தாண்டு பொருட்காட்சி அமைகிறது. 250க்கும் மேற்பட்ட அரங்குகளில் இறக்குமதி பொருட்கள் உட்பட அனைத்தும் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள், ரயில்வே, பி.எஸ்.என்.எல்., சார்பில் காட்சி கூடங்கள் இடம் பெறுகின்றன. டிக்கெட் கட்டணம் ரூ.30. ஐந்து வயதுக்கு உட்பட்டோருக்கு இலவசம். தினமும் மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி, சனி, ஞாயிறு காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்.

பொருட்காட்சி அனுமதி சீட்டின் பேரில் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு மெகா பம்பர் பரிசாக கார், டூவீலர், ஸ்கூட்டி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். டிச.,20 மாலை 6:30 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் வெங்கடேசன் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் விசாகன் கலந்து கொள்கின்றனர், என்றார். தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் தலைவர் ரத்தினவேல்,சங்க நிர்வாகிகள் ராஜிவ், ரமேஷ், கணேசன், தனுஷ்கோடி, செல்வம், ஸ்ரீதர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X