குடியுரிமை சட்டம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Updated : டிச 18, 2019 | Added : டிச 18, 2019 | கருத்துகள் (64)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள காங்., திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் உள்ளிட்ட 60 மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று (டிச.,18) விசாரித்தது. குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. கடந்த வாரம் பார்லி.,யில்

புதுடில்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள காங்., திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் உள்ளிட்ட 60 மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று (டிச.,18) விசாரித்தது. குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.



latest tamil news




கடந்த வாரம் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக காங்.,ன் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அசாமில் ஆளும் பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷித் கட்சி உள்ளிட்ட 60 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.


latest tamil news



மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப் ஆகிய 3 மாநில முதல்வர்களும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்படாது என திட்டவட்டமாக கூறி விட்டனர். இருந்தும் டில்லி, வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. டில்லியில் போராட்டம், வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.விசாரணை, ஜன.22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


டில்லி ஐகோர்ட் நாளை விசாரணை


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ஐகோர்ட்டை நாடும் படி அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, மனுதாரர்கள் டில்லி ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை ஏற்று கொண்ட ஐகோர்ட், இது குறித்து நாளை(டிச.,19) விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-டிச-201920:25:27 IST Report Abuse
ஆப்பு சில சமயம் நீதி மன்றமும் நம்ம சினிமா போலுய்ஸ் மாதிரி எல்லாம் முடிஞ்சு டேமேஜ் ஆனப்புறம்தான் கடைசியில் வரும்னு தோணுது.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
18-டிச-201919:05:10 IST Report Abuse
தாண்டவக்கோன் வக்கீலுங்கள வெச்சி "சட்டெ ""திருத்த"த்த நாங்க அமல் படுத்தவேயில்ல, CAA is ONLY on paper. அதுனால தட தேவையில்ல""னு சும்மா steady யா நிண்டு (கெஞ்ஜி) வாதாடிருக்காங்க. அமல் படுத்திருந்தா என்னாவும்னு நல்லாவே தெரியும்.
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
18-டிச-201919:49:15 IST Report Abuse
வல்வில் ஓரிஏன்..அமல் எந்திரிச்சி நின்னா என்னாவும் ?...
Rate this:
Cancel
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
18-டிச-201918:53:15 IST Report Abuse
Gopalakrishnan Ra காங்கிரஸ் , தி மு க , இன்னும் சில எதிர் காட்சிகள் சிறு பன்மை வோட்டுகளுக்காக நாட்டை காட்டி கொடுக்க தயாராகிவிட்டார்கள். இப்படிப்பட்ட காட்சிகளை துரத்தியடிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றபோது முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு வாங்கிக்கொண்டு போனார்கள். இவர்களை நாம் எதற்கு அனுமதிக்கவேண்டும். இந்த முஸ்லிம்களை நாம் அனுமதித்தால் அடுத்து இந்தியா முஸ்லீம் நாடு ஆகும். அதன்பிறகு இந்துக்கள் ஜியா வரி கட்டவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X