பொது செய்தி

இந்தியா

பூச்சிக்கொல்லி தெளிக்க ட்ரோன்: அசத்தும் விவசாயிகள்

Added : டிச 19, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஐதராபாத்: வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தும் முயற்சியாக தெலுங்கானா விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை பயன்படுத்தி பாராட்டை பெறுகின்றனர்.தெலுங்கானா மாநிலம் சிந்தகனி மண்டலத்தில் உள்ள பிரடுதுார் என்ற கிராமத்தை சேர்ந்த நுன்னா லெனின் என்பவர், வேளாண் பணிகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தும் முயற்சியாக தெலுங்கானா விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை பயன்படுத்தி பாராட்டை பெறுகின்றனர்.latest tamil newsதெலுங்கானா மாநிலம் சிந்தகனி மண்டலத்தில் உள்ள பிரடுதுார் என்ற கிராமத்தை சேர்ந்த நுன்னா லெனின் என்பவர், வேளாண் பணிகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும், வேலையாட்களின் கூலி பலமடங்கு அதிகரித்ததாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய பணிகளை செய்ய திட்டமிட்டார். கலைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவரான லெனின், ட்ரோன்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின் அவற்றை பயன்படுத்தி, வயல்களில் பூச்சிக்கொல்லியை தெளிக்க முடிவு செய்து, பயிற்சியும் பெற்றுள்ளார்.


latest tamil newsஇவரைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள பல விவசாயிகளும் ட்ரோன்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். ட்ரோன்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.500 மட்டுமே வாடகை தர வேண்டி உள்ளதால் விவசாயிகளிடம் இந்த முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரோன்களை பயன்படுத்துவதால் நேரமும், வேலையாட்களின் கூலித்தொகையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பூச்சிக் கொல்லிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பும் இதன் மூலம் குறைவதாக கூறுகின்றனர். வேளாண் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.R.Arul - Chennai,இந்தியா
19-டிச-201916:21:23 IST Report Abuse
S.R.Arul Good Move, But the spraying liquid should be domestic (natural) ingredient ….
Rate this:
Cancel
19-டிச-201915:30:13 IST Report Abuse
ஆப்பு இப்படித்தான் கேரளாவில் விமானம் மூலம் எண்டோ சல்ஃபான் மருந்தை தெளித்து நிறை குறைகளுடன் குழந்தைகள் பிறந்தன. வல்லிய சிறகுள்ள பறவைகள்னு ஒரு டாகுமெண்டரி யூடியூபில் உள்ளது. பார்த்து திருந்தலாம்.
Rate this:
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
19-டிச-201915:13:02 IST Report Abuse
Sampathkumar Sampath சூப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X