என்கவுன்டர் போலீஸ் மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : டிச 19, 2019 | Added : டிச 19, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: ஐதராபாத் என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசாருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஐதராபாத்தில் பெண் டாக்டர், லாரி டிரைவர்கள் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் 2 பேர் அளித்த வாக்குமூலத்தில், பெண் டாக்டரை கொலை செய்த பாணியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஐதராபாத் என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசாருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



ஐதராபாத்தில் பெண் டாக்டர், லாரி டிரைவர்கள் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் 2 பேர் அளித்த வாக்குமூலத்தில், பெண் டாக்டரை கொலை செய்த பாணியில் இதற்கு முன் 9 பேரை பலாத்காரம் செய்து, எரித்து கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது. குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு, தப்பி ஓட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.


latest tamil news



இந்த என்கவுன்டர் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று ஆய்வு நடத்தியது. இந்நிலையில் என்கவுன்டரில் சுடப்பட்ட 4 பேரின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (டிச.,19) மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார் அனைவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தி, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
20-டிச-201917:07:38 IST Report Abuse
ponssasi என் கவுண்ட்டர் போலீசை தூங்கி உச்ச நீதி மன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
20-டிச-201907:43:28 IST Report Abuse
spr நாட்டில் குற்றங்கள் அதிகமாவதற்கு முக்கியமான காரணம் தண்டனைகள் கடுமையாக இல்லை எனபதே செய்த குற்றத்தோடு ஓப்பிடுகையில் அதற்கான தண்டனை குறைவாக இருப்பின், அந்தக் குற்றத்தைச் செய்தாவது பலனை அனுபவிக்கலாம் என்றொரு மனப்பான்மை குற்றம் புரிபவர்களிடம் அதிகரித்து விட்டது நீதிபதிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்தால், அவர்கள் "என்னை உன்னால் என்ன செய்ய முடியும்" என்று காவற்துறையின் இயலாமையை சுட்டிக்காட்டி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள் நீதிமன்றத்தைக் குறை கூற இயலாத நிலையில் காவற்துறை சில சமயங்களில், அரசின் ஆதரவுடன் இது போல நடந்து கொள்கிறார்கள் யாரேனுமொரு கையாலாகாத பேர்வழிகளை போட்டுத்தள்ளி தங்களின் ஆளுமையை நிலைநாட்ட முயலுகிறார்கள் இவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்று நிரூபணம் ஆனால், நீதிமன்றமே இந்த தண்டனையைக் கொடுத்தால், இந்த சட்ட உரிமை மீறல் நடக்க வாய்ப்பில்லை நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இயற்கையாக மரணமெய்தினாலன்றி அவர்களுக்கு மரணமில்லை என்பதே கண்முன் காணும் நிலை தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைஞ்சலாக பல மொக்கையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. யார் யாருக்கு உடந்தை என்று தெரியவில்லை " நீங்கள் சொல்லி நானென்ன கேட்பது" என்று இதுவும் காவற்துறையின் ஒரு அங்கமான சிறைத்துறை மறைமுகமாக நீதிமன்றத்திற்கு விடும் சவாலோ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள், நிலையான அதிகார வர்க்கம், சுதந்திரமான பத்திரிகைகள்/ஊடகங்கள் , அரசியல் நிர்ணயச் சட்டத்தைப் பாதுகாக்கிற நீதியமைப்பு என அமைக்கப்பட்ட குடியாட்சியின் நான்கு தூண்கள் இன்று ஒன்றோடொன்று யார் பெரியவர் என்று போராடிக் கொண்டிருக்கிறது அதன் விளைவு மக்கள் அவதிப்படுகிறார்கள்
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
20-டிச-201907:13:15 IST Report Abuse
Ram மனு அளித்தவர்கள் கஞ்சா வைத்திருக்க வாய்ப்புள்ளது , போலீசார் அவர்கள் வீட்டை சோதனைப்போட்டு உங்கள் பாணியில் கவனிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . டேய் உருப்படாத பயலுகளே பெத்த பெற்றோர்களே , நீங்க மனு கொடுங்க மறியல் பண்ணுங்க ஒன்னும் செய்ய முடியாது , நங்கள் மக்கள் போலீஸ் பக்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X