பொது செய்தி

இந்தியா

இந்தியாவின், 'டாப் - 100' பிரபலங்கள்: பட்டியல் கோஹ்லிக்கு முதலிடம், ரஜினிக்கு 13வது இடம்

Updated : டிச 21, 2019 | Added : டிச 19, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள, இந்தியாவின், 'டாப் - 100' பிரபலங்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார். 'பாலிவுட்' நடிகர்கள் அக் ஷய் குமார் இரண்டாவது இடத்தையும், சல்மான் கான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில், நடிகர் ரஜினிகாந்துக்கு, 13வது இடம் கிடைத்துள்ளது.அமெரிக்காவைச்
இந்தியா, டாப் - 100. பிரபலங்கள், பட்டியல், கோஹ், ரஜினி,

புதுடில்லி: 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள, இந்தியாவின், 'டாப் - 100' பிரபலங்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார். 'பாலிவுட்' நடிகர்கள் அக் ஷய் குமார் இரண்டாவது இடத்தையும், சல்மான் கான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில், நடிகர் ரஜினிகாந்துக்கு, 13வது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'போர்ப்ஸ்' பத்திரிகை, 2019ம் ஆண்டுக்கான, இந்தியாவின், 'டாப் - 10' பிரபலங்கள் பட்டியலை, நேற்று வெளியிட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அக்டோபர் 2018 முதல், செப்டம்பர் 2019 வரை ஈட்டிய வருமானம், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம், அவர்களுக்கு கிடைத்த புகழ் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.\

இந்த பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, முதலிடம் பிடித்துள்ளார். இவர், 2019ல், 253 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.இவருக்கு அடுத்த இடத்தில், 'பாலிவுட்' நடிகர் அக் ஷய் குமார் இடம் பெற்றுள்ளார். இவரது ஆண்டு வருமானம், 293 கோடி ரூபாய். இது, விராட் கோஹ்லியின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாக இருந்தாலும், புகழின் அடிப்படையில், விராட் கோஹ்லி முன்னணி வகிக்கிறார்.

கடந்த, 2016 முதல், இந்த பட்டியலில் முதலிடம் வகித்து வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், இந்த ஆண்டு, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது ஆண்டு வருமானம், 229 கோடி ரூபாய்.இந்த பட்டியலில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு நான்காவது இடமும், கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஐந்தாவது இடமும் கிடைத்துள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒன்பது பேர் இடம்பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு, 14வது இடத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இந்தாண்டு, 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது ஆண்டு வருமானம், 100 கோடி ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, 11வது இடத்தில் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தாண்டு, 16வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது வருமானம், 95 கோடி ரூபாய்.

நடிகர் விஜய், 47வது இடத்திலும், அஜித்குமார், 52வது இடத்திலும், இயக்குனர் ஷங்கர், 55வது இடத்திலும், நடிகர் கமல்ஹாசன், 56வது இடத்திலும் உள்ளனர்.இவர்களின் ஆண்டு வருமானம், முறையே, 30 கோடி, 41 கோடி, 32 கோடி, 34 கோடி ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ், 32 கோடி ரூபாய் வருமானத்துடன், 64வது இடத்தை பிடித்துள்ளார். இயக்குனர்கள் சிவா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர், 12 மற்றும் 14 கோடி ரூபாயுடன், 80 மற்றும் 84வது இடத்தில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-டிச-201919:20:19 IST Report Abuse
Sampath Kumar இது நாட்டுக்கு ரொம்ப தேவை
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
20-டிச-201917:59:17 IST Report Abuse
Anbu எங்க ரசினிக்கு ஆரியர்கள் ஏன் முதலிடம் குடுக்கலே ??
Rate this:
Cancel
20-டிச-201911:03:57 IST Report Abuse
மதுவந்தி மற்றவர்கள் மகழ்ச்சிக்கு உரியவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X