உள்ளாட்சி துறைக்கு 12 தேசிய விருதுகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி துறைக்கு 12 தேசிய விருதுகள்

Updated : டிச 20, 2019 | Added : டிச 19, 2019
Share
சென்னை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியது உட்பட, பல்வேறு பணிகளுக்காக, மத்திய அரசு சார்பில், தமிழக உள்ளாட்சி துறைக்கு, 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், விருது வழங்கும் விழா, நேற்று டில்லியில் நடந்தது. விழாவில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநில
 உள்ளாட்சி துறைக்கு,12, தேசிய, விருதுகள்

சென்னை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியது உட்பட, பல்வேறு பணிகளுக்காக, மத்திய அரசு சார்பில், தமிழக உள்ளாட்சி துறைக்கு, 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், விருது வழங்கும் விழா, நேற்று டில்லியில் நடந்தது. விழாவில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநில அளவில், இரண்டு; மாவட்ட அளவில், நான்கு; ஊராட்சி ஒன்றிய அளவில், கிராம ஊராட்சி அளவில், தலா, ஒன்று என, மொத்தம் எட்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின், சிறப்பான செயல்பாட்டிற்காக, ஒரு தேசிய விருது மற்றும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.தீன்தயாள் உபாயத்யாயா திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக, தேசிய தங்க விருது வழங்கப்பட்டது.

இவ்விருதுகளை, மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நரேந்திர் சிங் தோமரிடம் இருந்து, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பெற்றார்.நடப்பாண்டு, ஊரக வளர்ச்சித் துறை, ஏற்கனவே, 19 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. நேற்று வழங்கப்பட்ட விருதுகளுடன் சேர்த்து, 31 விருதுகளை பெற்றுள்ளது.


உள்ளாட்சிக்கு நிதி ஒதுக்குங்கள்!



உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, டில்லியில், மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து,கோரிக்கை மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு பின், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, நிதி தேவை; அதற்கு, மத்திய அரசு உதவ வேண்டும்.

தமிழகத்தில் உள்ள, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 14வது மத்திய நிதி ஆணையத்தின்,
2017 - 18ம் ஆண்டிற்கான, நிலுவையில் உள்ள, 195 கோடி ரூபாய் செயலாக்க மானியம்; 2019 - 20ம் ஆண்டிற்கான, 2,370 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஆகியவற்றை, உடனடியாக விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X