ஸ்தம்பிப்பு: இணையசேவை முடக்கப்பட்டதால் டில்லியில் பதற்றம்

Updated : டிச 21, 2019 | Added : டிச 19, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம், டில்லியில் நேற்றும் தீவிரமாக நடந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கோட்டை நோக்கி பேரணியாக வந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், டில்லியின் சில பகுதிகளில் சிறிது நேரம் இணைய சேவை முடக்கப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்த, ஹிந்து, சீக்கியர், பார்சி, கிறிஸ்துவர் போன்ற சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டில்லி, ஜாமியா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பஸ்களுக்கு தீ வைத்ததுடன், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தினர். போலீசார் நடத்திய தடியடியில், பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து, டில்லியில் தினமும் போராட்டங்கள் நடக்கின்றன. வன்முறையை தடுக்கும் வகையில், டில்லியில், செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. நகரின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமான மாணவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர், செங்கோட்டை நோக்கி பேரணியாக வந்தனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியும், கண்டன கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை பிடித்தபடியும் இவர்கள், செங்கோட்டை அருகே குவிந்தனர். தடை உத்தரவு அமலில் இருப்பதால், அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் அமைப்பைச் சேர்ந்த உமர் காலித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, டில்லி போலீஸ் இணை கமிஷனர் மந்தீப் சிங் கூறியதாவது:போராட்டங்களை நடத்துவதற்கென சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் போராட்டங்களை நடத்தக் கூடாது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்துவது சரியல்ல. போராட்டம் நடத்தும் பகுதிக்குள், விஷமிகள் ஊடுருவி, வன்முறையை துாண்டி விடு வதற்கு வாய்ப்பு ள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், நிலைமையை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். இவ்வாறு, அவர் கூறினார்.

செங்கோட்டை பகுதியில் போலீசாரின் நடவடிக்கைகள் கடுமையாக இருந்ததை அடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலோனர், ஜுனேரி மஜித் பகுதியில் குவிந்தனர். அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாக, 12 பேர், டில்லியின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, டில்லியில் உள்ள மந்தி ஹவுஸ், ஜாபர்பாத், முஸ்தபாபாத், ஜாமியா நகர், ஷாகின்பாத் உள்ளிட்ட பல பகுதிகளில், நேற்று மொபைல் போன் மூலமான இணைய சேவை முடக்கப்பட்டது. இது குறித்து, ஏர்டெல் நிறுவனத்தினர் கூறுகையில், 'அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சில மணி நேரங்களுக்கு, இணைய சேவையை முடக்கும்படி, டில்லி போலீசார் கோரிக்கை விடுத்தனர்' என்றனர்.இந்நிலையில், நேற்று மாலையில், மீண்டும் இணைய சேவை சீரடைந்தது.


போக்குவரத்து நெருக்கடிடில்லியின் பல இடங்களிலும் நேற்று போராட்டம் நடந்ததை அடுத்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டில்லி - குர்கான் நெடுஞ்சாலை, போக்குவரத்து நெருக்கடியால் முற்றிலும் முடங்கியது. வாகனங்கள், 10 கி.மீ., வரை வரிசை கட்டி நின்றன.


மெட்ரோ ஸ்டேஷன் மூடல்போராட்டக்காரர்கள், நகருக்குள் வருவதை தடுக்கும் விதமாக, டில்லியில், 19 மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் நேற்று மூடப்பட்டன.ஜாமியா மிலியா, முனிர்கரா, ராஜிவ் சவுக், ஜன்பத், மந்தி ஹவுஸ், வசந்த் விஹார், சாந்தினி சவுக் ஆகிய ஸ்டேஷன்கள், மூடப்பட்டவையில் குறிப்பிடத்தக்கவை.


விமானங்கள் ரத்துடில்லியில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், விமானங்களின் பைலட், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்டோரால், விமான நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வர முடியவில்லை. இதையடுத்து, இன்டிகோ நிறுவனத்தின், 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.


மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்'குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டில்லி ஜாமியா பல்கலையில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது குறித்து விசாரிக்க, விசாரணை குழுவை அமைக்கக்கோரி, பல்வேறு அமைப்புகள் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது, விசாரணை குழுவை அமைப்பது, மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக, இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும்படி, மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், போராட்டங்களின் போது நடந்த வன்முறை குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அரசு, டில்லி மாநில அரசு, டில்லி போலீசாருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை, பிப்., 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இதற்கிடையே, டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


போலீசாருக்கு ரோஜாப்பூ* 'போராட்டத்துக்காக, தேர்வுகளை புறக்கணிக்கும் மாணவர்கள், அடுத்த, 'செமஸ்டரு'க்கான தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

* டில்லியில் பல இடங்களிலும் நேற்று நடந்த போராட்டத்தின் போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்கள், தாங்கள் காந்திய வழியை பின்பற்றுவதாக கூறி, போலீசாருக்கு ரோஜா பூக்களை வழங்கினர்.

* போராட்டத்தில் விஷமிகள் ஊடுருவதை தடுக்கும் வகையிலும், போராட்டத்தை கண்காணிக்கும் வகையில், முக்கியமான இடங்களில் ஆள் இல்லா உளவு விமானங்களை பறக்க விட்டு, டில்லி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் மீதுபோராட்டக்காரர்கள் புகார்டில்லி ஜுனேரி மஜித் பகுதியில், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, நேற்று போராட்டம் நடத்தினர். அங்கிருந்த பலரும், தங்கள் போராட்டத்தை, அரசியல் கட்சியினர், சுய நலத்துக்காக பயன்படுத்துவதாக கூறினர்.

பரியான் மீசன் என்ற மாணவர் கூறியதாவது:இங்கு அமைதியாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், ஸ்வராஜ் அபியான் உள்ளிட்ட சில அரசியல் கட்சியினர், எங்களை ஜந்தர் மந்தர் பகுதிக்கு வரும்படி அழைத்தனர்.அதை ஏற்க மறுத்து விட்டோம். எங்கள் போராட்டங்களை, அவர்கள், தங்கள் சுய நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் விரிக்கும் வலையில் விழ மாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dinesh - pune,இந்தியா
20-டிச-201920:15:15 IST Report Abuse
dinesh மாணவர்கள்: நாங்கள் அமைதியாக பஸ்சை கொளுத்திக்கொண்டிருக்கிறோம், காவல் துறை எங்களை விரட்டி விரட்டி அடிக்கிறது. நாங்கள் ஊர்ச்சொத்தை கொளுத்தக்கூட உரிமையில்லையா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-டிச-201911:51:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டிஜிட்டல் இந்தியா பா... ஸ்டைல்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-டிச-201911:38:53 IST Report Abuse
Natarajan Ramanathan எங்கெல்லாம் வன்முறை நிகழ்கிறதோ அங்கெல்லாம் இணைய சேவை, பேருந்து, மின்சாரம் மூன்றையும் முடக்க வேண்டும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-டிச-201921:16:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X