சென்னை : குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக, நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் டுவிட்டரில், கருத்துகள் வெளியிட்டனர். இதற்கு பதிலடியாக ரஜினிக்கு ஆதரவாக ''IStandWithRajinikanth'' என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்துகள் பதிவிட, அது இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. சட்டத்தை எதிர்த்து டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மற்றும் உ.பி.,யின் அலிகார்க் பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து போலீசார் உள்ளே சென்று நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது எனக்கூறியிருந்தார்.
இதனையடுத்து ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானோர், டுவிட்டரில் ரஜினியை விமர்சித்து ''ShameOnYouSanghiRajini'' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''IStandWithRajinikanth'' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
இந்த ஹேஸ்டேக்கில், ரஜினியை புகழ்ந்தும், அவரது கருத்தை ஆதரித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE