டில்லியில் நிலைமை சீரடைந்தது

Updated : டிச 23, 2019 | Added : டிச 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement
உ.பி.,வன்முறை,15 பேர் பலி,போராட்டம், டில்லி, ரயில் போக்குவரத்து, சீரடைந்தது

லக்னோ :குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலியானோரின் எண்ணிக்கை, 18 ஆக அதிகரித்துள்ளது. டில்லியில், ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடந்தாலும், பெரும்பாலான இடங்களில் அமைதி நிலவியது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உ.பி.,யில், மீரட், வாரணாசி, பிரோசாபாத், கான்பூர், பரூக்காபாத், காஜியாபாத், முஜாபர் நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கினர். போலீசாரும், தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர். சில இடங்களில் வாகனங்களுக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் வரை, ஆறு பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில், பலி எண்ணிக்கை, நேற்று, 18 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மீரட்டில், நான்கு பேர் இறந்தனர். பலியானோரில், 8 வயது சிறுவனும் அடக்கம். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில், 50 போலீசார், படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ராம்பூரில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். அரசின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் வன்முறை நடந்து வருகிறது. போலீசார் மீது தாக்குதல், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் என வடமாநிலங்களில் போராட்டம் திசை மாறி வருகிறது. இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். போலீசார் பலர் காயமடைந்துள்ளனர். ரயில் மறியல், ரயில் மற்றும் பஸ்சுகளுக்கு தீ வைத்தலும் அரங்கேறி உள்ளது. பல ரயில்வே ஸ்டேஷன்கள் சூறையாடப்பட்டன.


டில்லியில் கைது


தலைநகர் டில்லியில், நேற்று முன்தினம் தரியகன்ச் என்ற இடத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக, 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுப்பதாக, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அவர்களது குடும்பத்தினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை, அவர்களது வழக்கறிஞர்கள்சந்திக்கவும், சட்ட உதவி கிடைக்கவும் அனுமதி அளிக்கும்படி, டில்லி போலீசாருக்கு, மாஜிஸ்திரேட் அருள் வர்மா நேற்று உத்தரவிட்டார். டில்லியில், 'இந்தியா கேட்' பகுதியை நோக்கி, தடையை மீறி பேரணியாக சென்ற, பீம் ஆர்மி என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் உட்பட, 15 பேர், நேற்று கைது செய்யப்பட்டார். டில்லியில் ஒரு சில இடங்களில் நேற்று போராட்டங்கள் நடந்தாலும், மற்ற இடங்களில் இயல்பு நிலை காணப்பட்டது.


கம்பீருக்கு மிரட்டல்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டில்லி தொகுதி பா.ஜ., - எம்.பி.,யுமான கவுதம் கம்பீர், தனக்கு, போன் மூலம் மிரட்டல் வந்துள்ளதாக, டில்லி போலீ சில் புகார் அளித்துள்ளார். வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து, இந்த மிரட்டல் வந்ததாகவும், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும், இந்த புகாரில், அவர் தெரிவித்து உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற விஷயங்களில், கடுமையாக நடந்து கொள்வதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.போராட்டம் நடத்துவோர், வன்முறையில் இறங்கக் கூடாது.

மாயாவதி,
தலைவர்,
பகுஜன் சமாஜ்


தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை, சத்தீஸ்கரில் அமலுக்கு வந்தால், இங்கு வசிக்கும், 50 சதவீதம் பேரால், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாது. அதற்கான எந்த ஆவணங்களும், அவர்களிடம் இல்லை.

பூபேஷ் பாஹெல்,
சத்தீஸ்கர் முதல்வர், காங்.,



ஆமதாபாதில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டதற்கு, காங்., தலைவர்கள் தான் காரணம். காங்., கட்சியினர் தான் வன்முறையை துாண்டி விட்டனர்.
விஜய் ரூபானி,
குஜராத் முதல்வர், பா.ஜ.,



போராட்டம் நடத்துவோர் மீது, மத்திய அரசு, அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுகிறது. மத்திய அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.

பிரியங்கா,
பொதுச் செயலர், காங்.,

குடியுரிமை திருத்த சட்டத்தில், இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது.

சரத் பவார்,
தலைவர், தேசியவாத காங்.,




ரயில்வே சொத்துக்கள் சேதம்

*குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கம், அசாம், பீஹார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் நேற்று, 'பந்த்' நடந்தது. இதனால், இந்த மாநிலங்களில், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

* குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, மஹாராஷ்டிராவின் ஹின்கோலி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக, 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

* கர்நாடக மாநிலம், மங்களூரில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் பலியாகினர். இதையடுத்து, மங்களூரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று, பெரும்பாலான பகுதிகளில் அமைதி நிலவியதை அடுத்து, காலையில் இரண்டு மணி நேரம் தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

* குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, கேரளாவில், காங்., கட்சி சார்பில், நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நடந்த போராட்டங்களில், 88 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
22-டிச-201918:38:27 IST Report Abuse
தமிழ்வேள் வன்முறை கலவரம் பொதுச்சொத்து சேதம் இவற்றுக்காகவே பேரணி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள் இவற்றுக்கான பணம் கொடுக்கப்படுவது பாகிஸ்தான் மற்றும் வாடிகனிலிருந்து ....என்ஜிஓ க்களுக்கு வரும் வெளிநாட்டு FUND தடை செய்யப்பட்டதால் அதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் இப்படி கலவரம் தூண்டிவிடுகிறார்கள் காங்கிரஸ் திமுக கம்மிகள் திரிணாமுல் மற்றும் பச்சை பாவாடைகள் மட்டுமே இந்த கலவரம் வன்முறை நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள் நன்கு கவனித்து பார்க்கவும் ......வெளிநாட்டு காசு இன்றி இவர்களால் இந்த மாதிரி கலவரம் முன்னெடுக்க முடியாது கூடன்குளத்துக்கு மிஷ நரி கள் காசு கொடுத்தது போல
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
22-டிச-201913:08:01 IST Report Abuse
Balamurugan Balamurugan போராட்டங்களை மாநில அரசு ஒடுக்காவிட்டால் மத்திய அரசே இராணுவத்தை அனுப்பி போராட்டங்களை ஒடுக்க வேண்டும் அதுவே நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது பல சட்டங்களை வலிமைப்படுத்தினால் தான் நாடு நமது கையில் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-டிச-201907:35:42 IST Report Abuse
blocked user 8 வயது சிறுவனைக்கூட போராட்டம் என்ற பெயரில் பலி கொடுத்து இருக்கிறார்கள். எதிரிக்கட்சிகள் மக்களை மூடர்களாக்கி போராட்டத்தில் இறங்க வைத்து யார் இந்தியாவுக்கு பெரிய எதிரி என்று வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்கள். இப்படி அந்நியர்களுக்கு குடியுரிமை கொடுக்கவேண்டும் என்று அலையும் இந்தியர்களுக்கும் கூட இந்திய குடியுரிமை நிச்சயம் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X