'திருப்பையூர்'

Added : டிச 22, 2019 | |
Advertisement
திருப்பூர், ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது; பருத்தி உள்ளிட்ட வணிகம் தழைத்தோங்கிய இடமாக இருந்தது என்பது, பலருக்கும் தெரிந்த விஷயம். அதேசமயம், திருப்பூர், பண்டைய ஆட்சிக்காலங்களில், எத்தகைய நிலையில் இருந்தது என்பதை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது.திருப்பூர், வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய செயலாளர், புலவர்

திருப்பூர், ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது; பருத்தி உள்ளிட்ட வணிகம் தழைத்தோங்கிய இடமாக இருந்தது என்பது, பலருக்கும் தெரிந்த விஷயம். அதேசமயம், திருப்பூர், பண்டைய ஆட்சிக்காலங்களில், எத்தகைய நிலையில் இருந்தது என்பதை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது.திருப்பூர், வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய செயலாளர், புலவர் சுந்தரகணேசன், பகிர்ந்துகொண்ட தகவல்கள்...சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரால், தமிழகம் ஆளப்பட்ட தருணத்தில், கொங்கு மண்டலம் 24 நாடுகளாக, பிரிக்கப்பட்டிருந்ததாக, கொங்கு மண்டலச் சதகம் மூலம் அறிய முடிகிறது.தமிழில், 12ம் நூற்றாண்டிற்கு பின், ஆளுமை பெற்ற, சிற்றிலக்கியத்தில் ஒன்றே, குறவஞ்சி. அத்தகைய குறவஞ்சியில் ஒன்றுதான் அலகுமலைக்குறவஞ்சி.இதை, பொங்கலுார் நாட்டின் தலைநகரான, கொடுவாய் எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகனான சின்னதம்பி நாவலர் இயற்றியுள்ளார். அவர் இந்நுாலை இயற்றிய காலத்தைக் குறிப்பிடும்போது கலியுக சகாப்தம் 4854-ல் ( கி.பி 1753 ) அரங்கேற்றியதாக குறிப்பிடுவதால், 267 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அறிய முடிகிறது.பொங்கலுார் நாட்டில் ஓர் ஊராக இருந்த அலகுமலையில் இருந்து அருள்பாலித்து வருகின்ற தமிழ்க் கடவுளான முருகனுக்கு அலகுமலையாண்டவர் என்று பெயர். அதுபோன்றே அலகுமலைக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் பொங்கலுார் நாட்டையாண்ட வேளாளரில் கொடுவாயில் வாழ்ந்த ஓதாளர் குலத்தைச் சேர்ந்த பெரிய பெருமாள். இந்த நுால் ஓதாளரைச் சிறப்பித்துக் கூறுவதால் ஓதாளர் குறவஞ்சி என்றும் கூறப்படுகிறது. இதனை ஓலைச்சுவடியில் இருந்து 1963ம் ஆண்டு அச்சு நுாலாக்கியவர் பழனிச்சாமி புலவர்.அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் என்பது, அக்காலத்தில் திருப்பையூர் என்று சுட்டப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது. திருப்பையூர் ஒரு சங்ககால ஊராக இருக்குமோ என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X