
ஹூசேன்
சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஒட்டும் வெகு சிலர்களில் இவரும் ஒருவர் ஆனால் அது மட்டுமல்ல அவரது சிறப்பு அதையும் தாண்டி மனித நேயத்துடன் அவர் தன் ஆட்டோவில் செய்துள்ள செயல்கள்தான் அவரை தனித்துவமிக்கவராக காட்டுகின்றது.

ஆட்டோவில் ஏறும் வாடிக்கையாளர்களின் அவரச தேவைக்கு குடிநீர், மொபைல் சார்ஜர், தலைவலி கைகால் வலி உடல்வலிக்கான மருந்து மாத்திரைகள், விக்ஸ் மிட்டாய்கள்,போன் வந்தால் குறிப்பு எழுத பேனா பேப்பர், முகம் துடைக்க டிஷ்யூ பேப்பர்,பொழுது போக பத்திரிகை வாரஇதழ் என்ற நிரப்பிவைத்துள்ளார்.

யார் யாரோ எப்படி எல்லாம் சேவை செய்கிறார்கள் ஆட்டோ தொழிலாளியாக இருக்கும் நாம் நம் தொழில் மூலம் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியும் என்று யோசித்தேன், என் ஆட்டோவில் ஏறியதும் வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று கவனித்தேன் அதை எல்லாம் வாங்கி ஆட்டோவில் வைத்தேன் நான் வாங்கி வைக்கும் பொருள்கள் தீர்ந்துவிட்டால் மீண்டும் வாங்கி வைத்துவிடுவேன் இதற்கு வாடிக்கையாளர்களிடம் காசு வாங்குவதில்லை என் சொந்தக்காசில் இருந்து வாங்கி வைக்கிறேன் வாடிக்கையாளர்களும் பாராட்டுகிறார்கள் எனக்கும் மனத்திருப்தி ஏற்படுகிறது.
கடந்த நாற்பது வருடமாக ஆட்டோ ஒட்டும் ஹூசேன் சென்னை மைலாப்பூரைச் சார்ந்தவர் எங்கே கூப்பிட்டாலும் அலுத்துக்கொள்ளாலம் வரக்கூடியவர்,மீட்டர் கட்டணத்திற்கு மேல் வாங்காதவர் எப்போதும் மலர்ந்த முகம்
இப்பல்லாம் எங்கே வண்டி ஒடுது என்று அலுத்துக் கொள்ளும் ஆட்டோ ஒட்டுனர்கள் மத்தியில் ஹூசேன் என்றுமே அலுத்துக் கொள்ளாதவர் காலையில் இருந்து இரவு வரை இவரது ஆட்டோ ஒடிக்கொண்டேதான் இருக்கிறது, இவருக்கு என நிரந்தரமாக நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஒரு முறை நம்ம ஆட்டோவில் வந்துவிட்டால் அப்புறம் அவர் வாடிக்கையாளராக மட்டுமின்றி நண்பராகவும் உறவினராகவும் மாறிவிடுவர் என்றார் ஹூசேன் சிரித்துக்கொண்டே, அது உண்மைதான் என்பதை நம்மிடம் பேசிக்கொண்டு இருந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு அடுத்து அடுத்து வந்த கைபேசி அழைப்புகள் உணர்த்தின.அவரது எண்:98406 70352.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE