சென்னை: பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய மக்களுக்கு பாதிப்பு இல்லை. சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழக மக்களை, சிறுபான்மையினரை பாதுகாப்பதில் அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தி உள்ளேன்.பொதுமக்கள் தவறான பிரசாரங்களுக்கு செவி சாய்க்காமல் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement