வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்., நடத்தும் போராட்டத்தில் கலந்து வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள காங்., எம்.பி., ராகுல், அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டு வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று பேரணி நடத்தின. இதே போன்று டில்லியில் காங்.,ம் தர்ணா போராட்டம் நடத்த உள்ளது. காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்த கொள்ள உள்ளனர். இந்நிலையில், ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ராகுல் தனது டுவீட்டில், மோடியும் அமித்ஷாவும் இந்தியாவை பிளவு படுத்த எந்த இந்திய மாணவனும் அனுமதிக்கக் கூடாது. நாட்டை பிளவு படுத்தும் வகையிலேயே அவர்கள் செயல்படுகிறார்கள். நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். இந்தியா தான் உங்களின் எதிர்காலம். வெறும் இந்தியன் என உணர்ந்தால் மட்டும் போதாது. இது போன்ற மோசமான தருணங்களில் நாம் இந்தியன் என்பதை காட்ட வேண்டும்.
வெறுப்புணர்ச்சி கொண்டவர்கள் இந்தியாவை சிதைப்பதை அனுமதிக்கக் கூடாது. இன்று பகல் 3 மணிக்கு ராஜ் காட்டில், மோடி-அமித்ஷாவால் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை மற்றும் வெறுப்பிணர்ச்சிக்கு எதிராக காங்., நடத்தும் போராட்டத்தில் மாணவர்கள் அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE