அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது பேரணி அல்ல; போர் அணி- ஸ்டாலின் பேச்சு

Updated : டிச 23, 2019 | Added : டிச 23, 2019 | கருத்துகள் (332)
Share
Advertisement
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும், சென்னையில் நடந்தது பேரணி அல்ல, போர் அணி என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியாக பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள, ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர்
திமுக, பேரணி, எதிர்க்கட்சிகள், குடியுரிமைசட்டம்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும், சென்னையில் நடந்தது பேரணி அல்ல, போர் அணி என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியாக பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள, ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்டோருக்கு, குடியுரிமை அளிக்கும் வகையில், சட்டத்தில், மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் செய்தது.
பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறிய, இது தொடர்பான மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 'இச்சட்டத்தால், நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது' என, மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.


இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, அதை திரும்ப பெற வலியுறுத்தி, நாட்டின் பல பகுதிகளிலும், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்தப் பிரச்னை வாயிலாக, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியிலும், எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலும், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை, பூதாகரமாக்கும் முயற்சியில், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் இறங்கியுள்ளன. புதிய சட்டத் திருத்தம் மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், சென்னை எழும்பூரில், இன்று (டிச.,23) பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்தன. பேரணிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். எழும்பூர் சி.எம்.டி.ஏ., அலுவலகம் முன், காலை, 10:30 மணிக்கு துவங்கிய பேரணி, கூவம் கரையோரத்தை ஒட்டி உள்ள, லேங்ஸ் கார்டன் சாலை, சித்ரா தியேட்டர் சந்திப்பு, புதுப்பேட்டை வழியாக, ராஜரத்தினம் ஸ்டேடியத்தை வந்தடையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் பங்கேற்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, 98 அமைப்புகளுக்கும், தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களையும், சினிமா நடிகர் - நடிகையரையும், பேரணியில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், நடிகர் சங்கத்தினர், கமலின் மக்கள் நீதி மையம் கட்சிகள் பின்வாங்கியதால், வெளியூர்களில் இருந்து, பஸ்களில் ஆட்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.
பேரணியில் வன்முறை வெடிக்கும் அபாயமும் உருவாகி உள்ளதாக, உளவு போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே, சென்னை முழுவதும், 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 110 கேமராக்கள் மற்றும் 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


latest tamil news




ஸ்டாலின் பேச்சு


பேரணி நிறைவடைந்தப்பின் ஸ்டாலின் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். சென்னையில் இன்று நடந்தது பேரணி அல்ல; போர் அணி. இந்த போர் அணி, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (332)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஜன-202004:04:48 IST Report Abuse
meenakshisundaram அமைதிக்காலங்களிலே இந்த வார்த்தைகள் தேவையா ?-போர் ,கேடயம் ,போர்வாள் போன்றவை -எனது கிறிஸ்துவ நண்பர் கூறுவார், எங்களில் சிலர் 'salvation army 'என்ற அமைப்பை நடத்துகிறார்கள் ,இது இந்த அமைதிக்காலத்துக்கு ஒவ்வாத வார்த்தை என்று ,உண்மைதானே ?
Rate this:
Cancel
NATARAJAN - Coimbatore,இந்தியா
29-டிச-201911:08:25 IST Report Abuse
NATARAJAN bore அணி, அலுத்துப்போன ஊசிப்போன பேச்சுக்களும் அறிவிப்புகளும் போராட்டங்களும் ஊரை ஏமாற்ற வே.
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
28-டிச-201904:36:56 IST Report Abuse
Ashok Subramaniam ரொம்ப சரி இது ரொம்ப "போரான" அணிதான். நிக்கற முகங்களைப் பார்த்தாலே தெரியுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X