பொது செய்தி

இந்தியா

வாகன விபத்துகளில் மூன்றாம் நபர் இழப்பீடு: உச்சவரம்பு நிர்ணயிக்க ஆலோசனை

Updated : டிச 24, 2019 | Added : டிச 24, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி:மோட்டார் வாகன விபத்துகளில், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும், மூன்றாம் நபர் இழப்பீட்டுத் தொகையை, அதிகபட்சம், 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்.'கூடுதல் இழப்பீட்டுத் தொகை, சாலை போக்குவரத்து நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் வழங்கப்பட வேண்டும்' என, பொதுக் காப்பீடு கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.


மோட்டார் வாகனச் சட்டம், 2019படி, மோட்டார் வாகன விபத்துகளில் வழங்கப்படும் மூன்றாம் நபருக்கான இழப்பீடு தொகை மற்றும் அடிப்படை பிரீமியம் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.இதற்காக, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துடன் பேசி முடிவெடுக்க, அந்த சட்டம் வலியுறுத்துகிறது.

தற்போது, வாகன விபத்துகளுக்கான மூன்றாம் நபர் இழப்பீடு தொகைக்கு, உச்ச வரம்பு கிடையாது. தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்கள் நிர்ணயிக்கும் தொகை, மூன்றாம் நபருக்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது. இது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக விளங்குகிறது.இதற்கு பதில், மூன்றாம் நபர் விபத்து காப்பீடு இழப்பீடு தொகையை, 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்து, அதை மட்டும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

மீதி தொகையை, சாலை போக்குவரத்து நிதியத்திலிருந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுக் காப்பீடு கவுன்சிலால் முன்வைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதித்து, அதன் மூலம், புதிய நிதியம் துவக்கி, மூன்றாம் நபர் இழப்பீடுகளை அதிலிருந்து வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை, மத்திய சாலை போக்குவரத்து துறை ஆராய்ந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
24-டிச-201917:01:35 IST Report Abuse
 Sri,India அய்யா முதலில் போதை ஏற்றித்தரும் டாஸ்மாக் கடை முன் வாகனம் நிறுத்த தடை ஏற்படுத்தினால் பெரும்பாலான விபத்துக்கள் குறையும் .மேலும் போதையில் வாகனம் மோதி செத்தால் இழப்பீடு வழங்க தடை வேண்டும் . இவன் திமிருக்கு போதையில் வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்தினால் இன்சூரன்ஸ் நிறுவனம் எதெற்கு பொறுப்பேற்க வேண்டும்?? காப்பீடு தொகையை குறைக்க வேண்டும் . அனைவரும் காப்பீடு செய்யும் வகையில் நவீனமயமாக்க வேண்டும் . விதி மீறி செல்லும் வந்தால் ஏற்படும் விபத்துக்களில் அந்த வாகனத்தை ஒட்டியவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து இழப்பீட்டு தொகையை வசூலிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
24-டிச-201916:24:08 IST Report Abuse
adithyan சொல்வது சரியே. இன்சூரன்ஸ் கம்பெனிகள் அத்தனையும் பிராடுகளின் திருக்கூட்டம். ஒருவருக்கு நஷ்டஈடு உத்தரவிடப்பட்டால் அது அதிகமானால், உடனே ப்ரோக்கர்களை வைத்து குறைந்த தொகைக்கு ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும். மறுத்தால் ரௌடிகளை அனுப்பும். இது பத்திரிக்கைகளில் வெளிவந்தது. பல ஆண்டுகளுக்கு முன் மங்களூரில் ஒரு விமானவிபத்தில் அனைவரும் மாண்டனர். அத்தைகைய விபத்திற்கு எழுபத்தி ஐந்து லட்சம் ஈடாக தீர்மானிக்க பட்டது. ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட உறவினரிடம் புரோக்கர் மூலம் பேரம் பேசியது,அவர் மசியவில்லை என்ற பொது ஆட்களை அனுப்பி ஈடுகொடுக்க கோர்ட் மூலம் போனால் நாளாகும் என மிரட்டியது. இதுதான் இன்சூரன்ஸ் போக்கிரிகளின் லட்சணம்,
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
24-டிச-201914:10:45 IST Report Abuse
Rajas இந்திய சூழ்நிலைக்கு சரிவராத அதி வேக வாகனங்களை விற்பனை செய்ய எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல்சர் வண்டியின் விளம்பரமே ஸ்டண்ட் செய்வது போல் இருக்கும். அதை வெளியிட எப்படி அனுமதிக்கிறார்கள். Road Transport and Highways அதிகாரிகள் என்ன பலனுக்காக இந்த அதி வேக வாகனங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். இன்னொரு பக்கம் ரோடுகள் சரியில்லை. மருத்துவ செலவுகள் கூடி விட்டது, சக்கரை நோயாளிகள் அதிகமாகி விட்டார்கள். ஆனால் விபத்து ஏற்படுத்தும் அதி வேக வாகனங்கள் விற்பனைக்கு அனுமதிப்பார்கள். இந்தியாவில் எல்லா அநியாயத்தையும் பார்த்து விட்டு 60 வயதுக்கு மேலே வாழ்வது என்பதே சாதனை தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X