முப்படை தலைமை தளபதியாகிறார் பிபின் ராவத்?

Updated : டிச 24, 2019 | Added : டிச 24, 2019 | கருத்துகள் (9)
Advertisement
புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பதவியில், தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.கடந்த சுதந்திர தின உரையின் போது, 'முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் தலைமை தளபதி பதவி உருவாக்கப்படும் ' என, பிரதமர் மோடி அறிவித்தார். அதை தொடர்ந்து, இந்தப் பதவியை உருவாக்குவது
முப்படை, தலைமை தளபதி, முப்படை தலைமை தளபதி, பிபின் ராவத், ராணுவ தளபதி, மத்திய அமைச்சரவை கூட்டம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல்,  பிரதமர் மோடி, cds,  pmModi, NSA, ajit doval,army chief, bipin rawat,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பதவியில், தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


கடந்த சுதந்திர தின உரையின் போது, 'முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் தலைமை தளபதி பதவி உருவாக்கப்படும் ' என, பிரதமர் மோடி அறிவித்தார். அதை தொடர்ந்து, இந்தப் பதவியை உருவாக்குவது தொடர்பாகவும், தலைமை தளபதியின் அதிகாரம் உள்ளிட்டவை குறித்து வரையறை செய்யவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழு, முப்படை தளபதிகள் உட்பட பலரிடம் ஆலோசனை நடத்தியது. தலைமை தளபதி பதவிக்கான அடிப்படை வரைமுறைகளை இந்தக்குழு உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், டில்லியில் இன்று(டிச.,24) நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க ஒப்புதல் அளித்ததுடன், அஜித் தோவல் குழு அளித்த பரிந்துரையையும் ஏற்று கொண்டது.


latest tamil newsஇதனையடுத்து, முப்படை தலைமை தளபதி பதவிக்கு, தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ராணுவ தளபதியான அவரின் பதவிக்காலம் வரும் டிச.,31 அன்றுடன் நிறைவு பெறுகிறது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தலைமை தளபதி, நான்கு நட்சத்திரங்கள் பெற்றவராகவும், ராணுவ விவகாரங்கள் துறை தலைவராகவும் இருப்பார் என்றார்.


இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில்,
ராணுவ விவகாரங்கள் துறையின் கீழ் ஆயுதப்படைகள் வரும். இந்த ராணுவ விவகாரங்கள் துறையில், நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் இடம்பெறுவார்கள். ராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் அந்த குழுவில் இருப்பார்கள். அதன் தலைவராக முப்படை தலைமை தளபதி இருப்பார்.
புது தலைவர், எந்தவித ராணுவ உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டார். அவர் முப்படை விவகாரங்களில், பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசகராக செயல்படுவார். முப்படை தளபதிகளும், தங்களது துறைகளில் நடக்கும் பணிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
24-டிச-201920:59:03 IST Report Abuse
S.Baliah Seer ஒய்வு பெற்றவர்களை பதவியில் நீட்டிப்பது சரியான செயல் அல்ல.IAS ,IPS ,ராணுவம் போன்றவற்றில் இந்த வியாதி தொடர்கிறது.அது மட்டுமல்ல-முப்படையிலும் பதவியில் உள்ளபோது யார் சீனியரோ அவரை கோஆர்டினேட்டராக போடலாம்.உதாரணத்திற்கு விமானப்படை தளபதியாகிய ஏர்மார்ஷல் -ஆர்மி ,நேவி தளபதிகளுக்கு சீனியர் என்றால் அவரைத்தான் கோஆர்டினேட்டராக போடவேண்டும்.பதவி நீட்டிப்பு என்பது அடுத்த நிலையில் இருக்கும் சீனியர்களுக்கு பாதகமான செயல்களை உண்டாக்குவதோடு மொராலிட்டியை அழித்து விடும்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
25-டிச-201907:13:02 IST Report Abuse
Amal Anandanதிறமையற்றவர்களுக்கு பயம் அதிகமாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்றவர்களை அவர்கள் எவ்வளவு வயதானாலும் அவர்களை பதவியில் அமர்த்துவது வழக்கம். அதுதான் இப்போது நடக்கிறது. இவர்கள் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் சீரழிக்கின்றனர்....
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) இவங்கள பொறுத்தவரை நல்லது கெட்டதெல்லாம் ஆராய மாட்டார்கள் காங்கிரஸ் செய்த அனைத்தையும் தலைகீழாக மற்ற வேண்டும் அவ்வளவே. காங்கிரஸ் நல்லதே செய்திருந்தாலும் இவ்ரகளுக்கு அது சரியாக படாது.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
25-டிச-201907:13:42 IST Report Abuse
Amal Anandanஇவர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை அதனால்தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடக்கின்றனர்....
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
24-டிச-201916:33:25 IST Report Abuse
S.P. Barucha இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கும், மஸுத் ஆசர் விடுதலை ஆனதற்கு தவறான முடிவு எடுத்தவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இவரது பணித்திறமையில் அதிகமே சந்தேகம் இருக்கிறது. மத்திய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
25-டிச-201907:14:44 IST Report Abuse
Amal Anandanநீங்கள் சொல்வது உண்மை. அவர் மகன் 4000 கோடி அளவில் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளார் என்று தகவல்கள் வந்தன. இவர்கள்தான் யோக்கியர்களாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X