இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: என்.ஆர்.சி.,க்கும், என்.பி.ஆர்.க்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (என். பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (என்.ஆர்.சி.,) எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக கூறுகிறேன். என்.ஆர்.சி., தொடர்பாக தற்போது எந்த வித விவாதமும் தேவையில்லை.

தேசிய குடி மக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல் படுத்தும் திட்டம் இப்போது இல்லை.பிரதமர் மோடி கூறியது சரியே. நாட்டில் அகதிகள் முகாம் அமைக்கும் திட்டம் இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பார்லிமென்டிலோ, அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை . இதை வைத்து கேரளா, மேற்குவங்க மாநில அரசுகள் அரசியல் செய்யக்கூடாது.
பா.ஜ. எதை கூறினாலும், அதற்கு எதிராகவே ஓவைசி கூறுகிறார். கிழக்கில் சூரியன் உதிக்கும் என பா.ஜ. கூறினால், மேற்கில் உதிக்கும் என ஓவைசி கூறுவார்.
தடையாக இருக்காதீர்கள்
உங்களுடைய அரசியலுக்காக ஏழைகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்காதீர்கள். என்.ஆர்.சி, என்.பி.ஆர், ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் என்பதை மேற்குவங்கம், கேரளா மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மாநிலங்களுக்கு இடையேயான இடம் பெயர்தலை கண்டறியும்.
என்.பி.ஆரால் யாரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள். என்.பி.ஆரில் சில பெயர்கள் தவறாக விடப்பட்டிருக்கலாம் அவர்கள் குடியுரிமை ரத்து செய்யப்படாது. என்.ஆர்.சி. குறித்து இந்தியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE